ஜி -20 மாநாட்டில் பசி மற்றும் வறுமைக்கு எதிரான தலைப்பில் பிரதமர் மோடி ஆற்றிய உரை

பிரேசிலில் நடக்கும் ‘ஜி – 20’ உச்சி மாநாட்டில், ‘சமூக உள்ளடக்கம், பசி மற்றும் வறுமைக்கு எதிரான போராட்டம்’ என்ற தலைப்பில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று உரையாற்றினார். பிரதமர் நரேந்திர மோடி, மூன்று நாடுகளுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதலாவதாக, மேற்காசிய நாடான நைஜீரியாவுக்கு நேற்று முன்தினம் சென்றடைந்தார்.

அங்கு, அந்நாட்டு அதிபர் போலா அகமது டினுபுவை சந்தித்து பேசினார். அங்கிருந்து புறப்பட்ட மோடி, தென் அமெரிக்க நாடான பிரேசிலுக்கு நேற்று சென்றடைந்தார். பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நேற்று நடந்த,  ‘ஜி – 20’ உச்சி மாநாட்டில் மோடி பங்கேற்றார்.

மாநாட்டின் துவக்க அமர்வில், ‘சமூக உள்ளடக்கம், பசி மற்றும் வறுமைக்கு எதிரான போராட்டம்’ என்ற தலைப்பில் பிரதமர் மோடி நேற்று பேசியதாவது:

ஜி – 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கும் பிரேசில் அதிபர் லுாயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவுக்கு பாராட்டுகள்.

இந்த மாநாடு, நிலையான வளர்ச்சி என்ற இலக்கை மையமாக வைத்திருப்பது பாராட்டுக்குரியது. இந்த அணுகுமுறை, உலகளாவிய தெற்கின் பிரச்னைகளை எடுத்துக் காட்டுகிறது. கடந்த ஆண்டு டில்லியில் நடந்த ஜி – 20 மாநாட்டில் மக்களை மையமாக வைத்து, ‘ஓர் பூமி; ஓர் குடும்பம்; ஓர் எதிர்காலம்’ என்ற மையக்கருத்தை முன்னெடுத்து செல்கிறது.

வறுமை மற்றும் பசியை போக்க இந்தியா பல முன்னெடுப்புகளை செய்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில், 25 கோடி மக்கள் வறுமையின் பிடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். நாட்டில் உள்ள 80 கோடி மக்களுக்கு இலவச உணவு பொருட்களை அளித்து வருகிறோம். ‘அடிப்படைக்கு திரும்புவோம்; எதிர்காலத்தை நோக்கி நடைபோடுவோம்’ என்ற எங்கள் அணுகுமுறை சிறந்த பலனை அளிக்கிறது.

உலக அளவில் தற்போது நடக்கும் போர்களால், உலகளாவிய தெற்கில் உணவு, எரிபொருள், உரங்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த நேரத்தில், பசி மற்றும் வறுமைக்கு எதிரான உலகளாவிய கூட்டணியை நிறுவுவதற்கான பிரேசிலின் முயற்சி பாராட்டுக்குரியது. இவ்வாறு அவர் பேசினார்.

இந்த மாநாட்டை முடித்துக் கொண்டு, தென் அமெரிக்க நாடான கயானா செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் முகமது இர்பான் அலியை சந்திக்க உள்ளார். இந்த மாநாட்டில் பங்கேற்க வந்திருந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன், பிரதமர் மோடி பேச்சு நடத்தினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

மருத்துவ செய்திகள்

துத்தியின் மருத்துவக் குணம்

இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ...

குடல்வால் (அப்பெண்டிக்ஸ்) நோய்

நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்

நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ...