பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்த அந்நாட்டு அதிபர் லூயிஸ் இனாசியோ லூலாவுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி, மூன்று நாடுகளுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதலாவதாக, ன நைஜீரியா சென்றடைந்தார்.அங்கு, அந்நாட்டு அதிபர் போலா அகமது டினுபுவை சந்தித்து பேசினார். அங்கிருந்து புறப்பட்ட மோடி, பிரேசிலுக்கு சென்றடைந்தார்.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடந்த, ‘ஜி – 20’ உச்சி மாநாட்டில் மோடி பங்கேற்று மாநாட்டின் துவக்க அமர்வில், ‘சமூக உள்ளடக்கம், பசி மற்றும் வறுமைக்கு எதிரான போராட்டம்’ என்ற தலைப்பில் பிரதமர் மோடி பேசினார்.
இந்நிலையில் மத்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெயிஸ்வால் கூறியதாவது, பிரதமர் மோடி பிரேசில் அதிபர் லுாயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவை மீண்டும் சந்தித்து ஜி – 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்தமைக்காக பாராட்டையும், நன்றியை தெரிவித்தார்.
மேலும் இரு தரப்பு நல்லுறவு, எரிசக்தி, உயிரி எரிபொருள்கள், பாதுகாப்பு, விவசாயம் மற்றும் பல துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவோம். இவ்வாறு அதில் மோடி கூறியதாக தெரிவித்துள்ளார்.
நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது எலும்பு மஜ்ஜை ... |
100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ... |
இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ... |