அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை மக்கள் நிராகரித்து விட்டனர் – மோடி

 ‘பார்லியில் மக்களுக்காக என்றுமே காங்., பேசியதில்லை. அதிகாரப் பசி கொண்ட கட்சிகளை வாக்காளர்கள் நிராகரித்துள்ளனர்’ என பிரதமர் மோடி தெரிவித்தார்.

பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் இன்று (நவ.,25) முதல் டிசம்பர் 20ம் தேதி வரை நடைபெறுகிறது. கூட்டத்தில் பங்கேற்க வந்த பிரதமர் மோடி, பார்லிமென்ட் வளாகத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: 2024ம் ஆண்டு கடைசி கூட்டத் தொடர் இது. இந்த கூட்டத்தொடரை சிறப்பாக நடத்த ஒத்துழைப்பு தர வேண்டும். நாளை 75வது அரசியலமைப்பு தினம் பார்லிமென்டில் கொண்டாடப்படும். பார்லிமென்டில் ஆக்கபூர்வமான விவாதம் நடக்கும் என்று நம்புகிறேன்.

பார்லிமென்டில் ஆக்கப்பூர்வமான விவாதங்களை நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அவசியம். தங்களின் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க மக்கள் நம்மை தேர்வு செய்து அனுப்பி உள்ளனர். விவாதத்தில் அதிகமான எம்பிக்கள் பங்கேற்க வேண்டும். பார்லிமென்டின் பாரம்பரியம், கண்ணியத்தை பாதுகாக்க வேண்டும். கூட்டத்தொடரை சமூகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தர வேண்டும். ஆக்கபூர்வமான பார்லிமென்ட் கூட்டத்திற்காக காத்திருக்கிறேன்.

அரசியலமைப்பு சட்டம் கொண்டுவரப்பட்டு 75 ஆண்டுகள் முடிவடையும் நிலையில், கூட்டத்தொடர் நடப்பது சிறப்பு. பார்லிமென்டில் மக்களுக்காக காங்கிரஸ் கட்சி எப்போதும் பேசியதில்லை. அதிகார பசி கொண்ட கட்சிகளை வாக்காளர்கள் நிராகரித்துள்ளனர். பார்லிமென்ட் நடவடிக்கைகளை சீர்குலைக்க சில கட்சிகள் முயற்சிக்கின்றன. மக்களால் நிராகரிக்கப் பட்டவர்கள் பார்லிமென்டில் அமளியில் ஈடுபடுகின்றனர். கூட்டத்தொடருக்கு இடையூறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாம் விழித்தால் கலப்படத்தை முழ ...

நாம் விழித்தால் கலப்படத்தை முழுமையாக நீக்கலாம் – அண்ணாமலை ''கலப்பட பொருள் இருந்தால், கடைக்காரரிடம் நாம் கேள்வி எழுப்ப ...

இந்தியாவில் விமான பயணம் செய்வோ ...

இந்தியாவில் விமான பயணம் செய்வோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்நாட்டு விமான போக்குவரத்து சந்தையில் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ள ...

சீனா செல்கிறார் வெளியுறவு செயல ...

சீனா செல்கிறார் வெளியுறவு செயலர் மத்திய வெளியுறவு அமைச்சக செயலர் விக்ரம் மிஸ்ரி, வரும் ...

குடியரசு தின விழாவில் பங்கேற்க ...

குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தோனேசியா அதிபர் இந்தியா வந்தார் டில்லியில் நடக்கும் நாட்டின் 76வது குடியரசு தின விழாவில் ...

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண் ...

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண்டுகளில் நிறைவேற்றிவிட்டோம் – அமித் ஷா ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது ...

டங்ஸ்டன் ஏலம் ரத்து : மக்களின் க ...

டங்ஸ்டன் ஏலம் ரத்து : மக்களின் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு உள்ளூர் மக்களின் கோரிக்கையை ஏற்று, மதுரை அருகே அமைய ...

மருத்துவ செய்திகள்

சிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா ?

சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ...

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.