குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் அன்னபூர்ணா தேவி இன்று பால் விவாகம் முகத் பாரத் தேசிய இயக்கத்தை தொடங்கி வைக்கிறார்

குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி நாளை (27  நவம்பர் 2024) புதுதில்லியில் உள்ள  விக்யான் பவனில் நடைபெறும் விழாவில் “பால் விவாகம் முக்த் பாரத்” என்ற தேசிய இயக்கத்தை தொடங்கிவைக்கிறார்.  இவ்விழாவில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு இணையமைச்சர் திருமதி சாவித்ரி தாக்கூர்  பங்கேற்கிறார்

2015-ம் ஆண்டு ஜனவரி 22-ம் தேதி அன்று பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட முன்னோடித் திட்டமான ‘பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ திட்டத்தின் வெற்றியானது  பெண் குழந்தைகள் மீதான அணுகுமுறை மற்றும் நடத்தைகளில் நேர்மறையான மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. இந்த வெற்றியின் உந்துதலாலா தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டம் குழந்தை திருமணத்திலிருந்து நாட்டை விடுவிப்பதில் கவனம் செலுத்தும்.  வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்கு பார்வையை நனவாக்க பெண்களிடையே திறன், மேம்பாடு, தொழில்முனைவை ஊக்குவிப்பதற்கான  நடைவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த சில ஆண்டுகளில் பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதத்தை குறைப்பதிலும், அனைத்து நிலைகளிலும் பெண் குழந்தைகளின்  முன்னேற்றத்தை ஊக்குவிப்பதிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. மனித உரிமை மீறல்களின் மிக மோசமான வடிவங்களில் ஒன்றான குழந்தை திருமணத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவது கவலைக்குரிய  விஷயமாகும்.

குழந்தை திருமணத்திற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துதல், தடுப்பு நடவடிக்கைகள் போன்றவற்றுக்கு இத்திட்டம் ஆதரவளிக்கும்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மிரட்டும் எலி காய்ச்சல்

மிரட்டும் எலி காய்ச்சல் கேரளாவில் லெப்டோஸ்பிரோசிஸ் (எலி காய்ச்சல்) தீவிரமாக பரவிவருகிறது. இந்த ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா ந ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மருத்துவ செய்திகள்

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.

பள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு

பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ...