ஹிந்துக்களை பாதுகாக்க வேண்டும் – வங்கதேசத்திற்கு இந்தியா வலியுறுத்தல்

வங்கதேசத்தில் வசிக்கும் ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரை பாதுகாக்க வேண்டிய கடமையை அந்நாட்டின் இடைக்கால அரசு நிறைவேற்ற வேண்டும் ” என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

வங்கதேசத்தில் தொடர்ந்து ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடந்து வருகிறது. இது தடுக்கப்படும் என அந்நாட்டு இடைக்கால அரசு கூறினாலும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இதற்கு எதிராக ஹிந்துக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

‘சம்மிலிதா சனாதனி ஜோதே’ என்ற ஹிந்து அமைப்பின் தலைவர் சின்மாய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரி. இவர், ‘இஸ்கான்’ எனப்படும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் முன்னாள் நிர்வாகியை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர். மேலும், ‘ இஸ்கான் ‘ அமைப்பை தடை செய்யக்கோரி நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.

ஹிந்துக்கள் மற்றும் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல் பிரச்னையை வங்கதேச அரசிடம் தொடர்ச்சியாகவும், வலிமையாகவும் எடுத்துக்கூறி வருகிறோம். அனைத்து சிறுபான்மையினரையும் பாதுகாக்க வேண்டிய கடமையை இடைக்கால அரசு நிறைவேற்ற வேண்டும் என்பது எங்களின் நிலைப்பாடு. பயங்கரவாதத்திற்கு ஆதரவான பேச்சுக்கள், வன்முறை சம்பவங்கள் அதிகரிப்பு ஆகியவை பார்த்து கவலைப்படுகிறோம். இந்நிகழ்வுகள் அனைத்தையும் மீடியாக்களில் வருபவை என ஒதுக்கிவிட முடியாது.

இஸ்கான் அமைப்பானது, உலகளவில் சமூக சேவையில் நன்கு அறியப்பட்ட அமைப்பாகும். சிறுபான்மையினரை பாதுகாக்க அனைத்து நடவடிக்கையையும் அந்நாட்டு அரசு எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ராகுல் கருத்து துரதிர்ஷ்டம்

மஹா., தேர்தல் பிரசாரத்தின் போது எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பேசும்போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் போல், பிரதமர் மோடியும் மறதியால் அவதிப்படுவதாக கூறியிருந்தார்.

இது குறித்து ரன்தீர் ஜெயிஸ்வால் கூறியதாவது: இந்தியாவும், அமெரிக்காவும் பல்வேறு வகைகளில் உறவை பகிர்ந்து வருகின்றன. இது பல ஆண்டுகளாக பரஸ்பர மரியாதை மற்றும் உறுதித்தன்மை உள்ளிட்டவற்றால் கட்டமைக்கப்பட்டது. ராகுலின் இதுபோன்ற கருத்து துரதிர்ஷ்டவசமானது. அவரின் கருத்து இந்திய அரசின் நிலைப்பாட்டை எதிரொலிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

அதானி விவகாரம்

அதானி விவகாரம் குறித்து ரன்தீர் ஜெயிஸ்வால் கூறியதாவது: அமெரிக்க நீதித்துறை, தனியார் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் இடையிான சட்ட விவகாரமாக நாங்கள் பார்க்கிறோம். இந்த விவகாரம் குறித்து இந்திய அரசுக்கு எந்த தகவலும் வரவில்லை. அமெரிக்க அரசு எந்த தகவலையும் பகிரவில்லை. கோரிக்கையையும் அமெரிக்க அளிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாம் விழித்தால் கலப்படத்தை முழ ...

நாம் விழித்தால் கலப்படத்தை முழுமையாக நீக்கலாம் – அண்ணாமலை ''கலப்பட பொருள் இருந்தால், கடைக்காரரிடம் நாம் கேள்வி எழுப்ப ...

இந்தியாவில் விமான பயணம் செய்வோ ...

இந்தியாவில் விமான பயணம் செய்வோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்நாட்டு விமான போக்குவரத்து சந்தையில் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ள ...

சீனா செல்கிறார் வெளியுறவு செயல ...

சீனா செல்கிறார் வெளியுறவு செயலர் மத்திய வெளியுறவு அமைச்சக செயலர் விக்ரம் மிஸ்ரி, வரும் ...

குடியரசு தின விழாவில் பங்கேற்க ...

குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தோனேசியா அதிபர் இந்தியா வந்தார் டில்லியில் நடக்கும் நாட்டின் 76வது குடியரசு தின விழாவில் ...

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண் ...

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண்டுகளில் நிறைவேற்றிவிட்டோம் – அமித் ஷா ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது ...

டங்ஸ்டன் ஏலம் ரத்து : மக்களின் க ...

டங்ஸ்டன் ஏலம் ரத்து : மக்களின் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு உள்ளூர் மக்களின் கோரிக்கையை ஏற்று, மதுரை அருகே அமைய ...

மருத்துவ செய்திகள்

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.

அதிமதுரத்தின் மருத்துவக் குணம்

இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ...

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...