சாகசத்தை மட்டுமே பேசுகிறது வரலாறு – அமைச்சர் ஜெய் சங்கர்

”அனைத்து சமூகத்திலும் வரலாறு என்பது சிக்கலானது. அன்றைய அரசியல் நிலவரம் குறித்து பெரும்பாலும் சாதகமான அம்சங்களை மட்டுமே எடுத்துரைக்கிறது. திப்பு சுல்தான் விஷயத்திலும் இதுவே நடந்துள்ளது,” என, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

வரலாற்று ஆய்வாளர் விக்ரம் சம்பத் எழுதிய, ‘திப்பு சுல்தான்: தி சாகா ஆப் மைசூர் இன்டரெக்னம் 1761 – 1799’ என்ற புத்தகத்தை, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் டில்லியில் வெளியிட்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

கடந்த 10 ஆண்டுகளில் நம் நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், மாற்றுக் கண்ணோட்டங்கள் மற்றும் சமநிலையான கருத்துக்கள் தோன்றுவதற்கு ஊக்கமளித்துள்ளன.

நாம் ஓட்டு வங்கி சிறையில் சிக்கிக் கொள்ளவில்லை. மேலும், சங்கடத்துக்குரிய உண்மைகளை வெளிக்கொண்டு வருவது அரசியல் ரீதியாக தவறு அல்ல. திறந்த மனதுடன் கூடிய புலமையும், உண்மையான விவாதமும் பன்மைத்துவ சமூகம் மற்றும் துடிப்பான ஜனநாயகம் உருவாக மையமாக உள்ளன.

திப்பு சுல்தானை பொறுத்தவரை இந்திய வரலாற்றில் அவர் ஒரு சிக்கலான மனிதர். ஒருபுறம், ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்ததில் முக்கிய நபராக அவர் புகழ் பெற்றார்.

இந்திய தீபகற்ப தலைவிதியைப் பொறுத்தவரை அவரது தோல்வியும், மரணமும் ஒரு திருப்புமுனையாகக் கருதப்படலாம் என்பது உண்மைதான். அதே நேரத்தில் அவர் பாதகமான உணர்வுகளை துாண்டியதாக மைசூரு, கூர்க் மற்றும் மலபாரின் சில பகுதிகளில் கருதப்படுகிறது. சமகால வரலாறு என்பது நல்லனவற்றை கூறுகின்றன என்பதில் மாற்றுக் கருத்து இல்லை; அதேநேரம் பாதகங்களையும் தவிர்க்க தவறுவதில்லை.

அனைத்து சமூகத்திலும் வரலாறு என்பது சிக்கலானது. அன்றைய அரசியல் நிலவரம் குறித்து பெரும்பாலும் சாதகமான அம்சங்களை மட்டுமே எடுத்துரைக்கிறது. திப்பு சுல்தான் விஷயத்திலும் இதுவே நடந்துள்ளது.இந்த புத்தகம் திப்பு சுல்தான் பற்றிய உண்மைகளை பேசுவதோடு, வாசகர்களின் சொந்த முடிவுக்கும் இடம் அளிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பா ...

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பாஜக – சிவ சேனா’ கூட்டணி வசம் இந்தியாவின் பணக்கார மாநகராட்சியான மும்பை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண் ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண்டும் “மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் காட்டாட்சிக்கு விரைவில் ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்ச ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்சி திருவிழா பிரதமர் நரேந்திர மோடி இன்று குவஹாத்தியில் உள்ள லோகப்ரியா ...

S. I. R. உருப்படியான வேலையை முடித்த ...

S. I. R.  உருப்படியான வேலையை  முடித்திருக்கிறது தேர்தல் கமிஷன் S. I. R. மூலம் உருப்படியான ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மருத்துவ செய்திகள்

உடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை

மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ...

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...

வாழையின் மருத்துவக் குணம்

வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு ...