உலக கடல்சார் தொழில்நுட்ப மாநாடு – 2024-ன் தொடக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் மத்திய அரசின் கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கப்பல் போக்குவரத்து தலைமை இயக்குநரும், கூடுதல் செயலாளருமான திரு ஷியாம் ஜெகந்நாதன் பங்கேற்று பேசினார். கடல்சார் துறையில் உலக அளவில் முன்னணி நாடாக மாறுவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை அவர் எடுத்துரைத்தார். உலகளாவிய கப்பல் மறுசுழற்சி சந்தையில் 20 சதவீத பங்கை அடைவதற்கான இலக்குடன் இந்தியா செயல்படுவதாக கூறினார். 2047-ம் ஆண்டுக்குள் கப்பல் கட்டுவதில் 5-வது இடத்திற்கு முன்னேறுவதையும் இந்தியா இலக்காக கொண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
கப்பல் போக்குவரத்து என்பது உலகளாவிய சரக்கு போக்குவரத்திலும், விநியோகச் சங்கிலியிலும் உயிர்நாடி என்று அவர் கூறினார். கப்பல் துறை ஒரு பெரிய மாற்றத்திற்கு உட்பட்டு வருகிறது எனவும் இந்த மாற்றத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். புவிசார் அரசியல் சூழல், மோதல்கள், பருவநிலை மாற்றம், தொழில்நுட்ப மாற்றங்கள், மாற்று எரிபொருட்களுக்கான தேடல் போன்ற முக்கிய சவால்களை அவர் சுட்டிக்காட்டினார். இத்துறையின் நிலையான வளர்ச்சியை உறுதி செய்ய இவற்றில் கவனம் செலுத்தப்படவேண்டும் என்று அவர் கூறினார்.
தொழில்நுட்ப முன்னேற்றங்களில் மனித அம்சங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ஜெகந்நாதன், இந்த சவால்களை வெற்றிகரமாக வழிநடத்த கடல்சார் தொழில்துறையில் உலகளாவிய ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்திய கப்பல் போக்குவரத்துப் பதிவேட்டின் செயல் தலைவர் அருண் சர்மா பேசுகையில், கடந்த 160 ஆண்டுகளில் கப்பல் தொழில் இரண்டு பெரிய சுழற்சிகளுக்கு உட்பட்டுள்ளது என்றும், இப்போது, மூன்றாவது பெரிய மாற்றத்திற்கான சுழற்சியில் உள்ளது என்றும் தெரிவித்தார். கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதை நோக்கி தற்போதைய பயணம் நகர்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடல்சார் தொழில்நுட்பத்தில் அண்மைக்கால முன்னேற்றங்களையும், சவால்களையும் பற்றி விவாதிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மூன்று நாள் மாநாட்டின் தொடக்க விழாவில் கடல்சார் தொழில்துறை தலைவர்கள், வல்லுநர்கள், கொள்கை வகுப்பாளர்கள் பங்கேற்றனர்.
அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ... |
பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ... |