‘ஏக்நாத் ஷிண்டே எந்த இலாக்காவும் கேட்கவில்லை. டிசம்பர் 16ம் தேதி அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும்’ என மஹா., முதல்வர் பட்னவிஸ் தெரிவித்தார்.
மஹாராஷ்டிராவின் முதல்வராக பா.ஜ.,வின் தேவேந்திர பட்னவிஸ் நேற்று பதவியேற்றார். சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்.,கின் அஜித் பவார் துணை முதல்வர்களாக பதவியேற்றனர். அவர் ஆங்கில செய்தி சேனலுக்கு இன்று (டிச.,06) அளித்த பேட்டி:
பா.ஜ.,வை சேர்ந்தவர் தான் முதல்வர் என்பதை முதல் சந்திப்பிலேயே ஏக்நாத் ஷிண்டே ஏற்றுக்கொண்டார். சிவசேனா கட்சி தலைவர்கள் சிலர் தங்கள் கட்சியில் இருந்து முதல்வர் வர வேண்டும் என விரும்பினர். நாங்கள் பா.ஜ.,வை சேர்ந்தவர் தான் முதல்வர் என்பதில் திட்டவட்டமாக இருந்தோம். தனிப்பட்ட முறையில் ஷிண்டேவுடன் எனக்கு நல்லுறவு உள்ளது. ஏக்நாத் ஷிண்டே எந்த இலாக்காவும் கேட்கவில்லை. டிசம்பர் 16ம் தேதி அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும்.
உள்துறை எப்பொழுதும் பா.ஜ., வசம் தான் இருக்கும். கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் நாங்கள் ஒருமித்த கருத்தை எட்டி உள்ளோம். பிரிவினைவாத அரசியலை மக்கள் நிராகரித்தனர். இலவச மின்சாரம், கல்வி போன்ற நல்ல திட்டங்களால் மஹாராஷ்டிராவில் மீண்டும் பா.ஜ., ஆட்சி அமைந்தது. இது தான் பா.ஜ., மிகப்பெரிய கட்சியாக உருவானதற்கு காரணம். முழு மனதுடன் மக்கள் என்னை ஏற்றுக்கொண்டனர். இவ்வாறு அவர் கூறினார்.
முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ... |
பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ... |
உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ... |