6 மாதத்திற்குள் ஆதவ் அர்ஜூனா மனம் மாறுவாரா அல்லது திருமாவளவன் அணி மாறுவாரா? என பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜூனா, சமீப நாட்களாக, தி.மு.க.,வுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். தி.மு.க.,வும் வி.சி.,யும் ஒரே கூட்டணில் நீடிக்கும் நிலையில், இவருடைய தன்னிச்சையான செயல்பாடுகளால், தி.மு.க.,வுடனான உறவில் சிக்கல் ஏற்பட்டது.
தி.மு.க., தலைமையை கடுமையாக விமர்சித்து வரும் ஆதவ் அர்ஜூனாவை, கட்சியில் இருந்து ஆறு மாத காலத்திற்கு தற்காலிக நீக்கம் செய்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உத்தரவிட்டார். இது குறித்து இன்று(டிச.,10) சமூகவலைதளத்தில் தமிழிசை வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
ஆதவ் அர்ஜுனாவை ஆறு மாதத்திற்கு இடை நீக்கம் என திருமாவளவன் அறிவித்துள்ளது. 6 மாதத்திற்குள் ஆதவ் அர்ஜூனா மனம் மாறுவாரா அல்லது திருமாவளவன் அணி மாறுவாரா? என தமிழிசை கேள்வி எழுப்பி உள்ளார்.
கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ... |
மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ... |
உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ... |