பிரதமரின் கிராமப்புற சாலை இணைப்பு திட்டம்

வறுமை நிலையை  குறைப்பதற்கான  உத்திசார் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மத்திய அரசு, பிரதமரின் கிராமப் புறச் சாலைகள் திட்டத்தை 2000   டிசம்பர் 25 அன்று மத்திய நிதியுத வியுடன் கூடிய திட்டமாக அறிவித்தது. இத்திட்டம் மக்கள் தொகை அடிப்படையில் (சமவெளிப் பகுதிகளில் 500+ மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் 250+) சாலை வசதிகள் இல்லாத கிராமப் புறங்களுக்கு அனைத்து பருவ நிலைகளுக்கும் ஏற்ற வகையில் சாலைகளை அமைப்பதன் மூலம் ஊரகப் பகுதிகளில் போக்கு வரத்துக்கான  இணைப்பை வழங்க வகை செய்கிறது.

இமய  மலையை  ஒட்டிய  மாநிலங்கள் மற்றும்  யூனியன் பிரதேசங்களில் (2001-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சில சிறப்பு பகுதிகள்) கிராமப்புற மக்களின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்து வதற்கான நடவடிக்கையாக இது அமைந்துள்ளது. இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், 2001-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 100 நபர்கள் அல்லது அதற்கும் கூடுதலான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 50,000 கி.மீ நீளத்திலான கிராமப்புற சாலைகளை மேம்படுத்தும் இலக்குடன் இத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் கடந்த  2013-ம் ஆண்டு தொடங்கப் பட்டது.

இத்திட்டம் குறித்து நிதி ஆயோக், இந்திய மேலாண்மைக் கழகம், அகமதாபாத், உலக வங்கி மற்றும் சர்வதேச தொழிலாளர் சம்மேளனம் ஆகியவை நடத்திய பல்வேறு மதிப்பீட்டு ஆய்வுகள், கல்வி, சுகாதார வசதிகளுக்கான அணுகலை மேம்படுத்தி யுள்ளது.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் ஊரக வளர்ச்சித் துறை இணையமைச்சர் திரு. கமலேஷ் பாஸ்வான் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரேசில் அதிபருடன் சேர்ந்து மே ...

பிரேசில் அதிபருடன் சேர்ந்து மேற்கோண்ட கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையின் தமிழாக்கம் மேன்மை தங்கிய எனது சிறந்த நண்பரான அதிபர் லூலா ...

இந்தியா – பிரேசில் இடையே 20 பில்ல ...

இந்தியா – பிரேசில் இடையே 20 பில்லியன் டாலர் வர்த்தக இலக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி, அரசு முறைப் பயணத்தின் ...

பிரதமரின் பிரேசில் பயணம்: பலன்க ...

பிரதமரின் பிரேசில் பயணம்: பலன்களும் ஒப்பந்தங்களும் இரு தரப்பினருக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: 1. சர்வதேச ...

அர்ஜென்டினா அதிபருடன் பிரதமர் ...

அர்ஜென்டினா அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு: லித்தியம் சுரங்கங்கள் அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை அர்​ஜென்​டினா அதிபர் சேவியர் மிலேயை பிரதமர் மோடி நேற்று ...

“பயங்கரவாதிகளுக்கு எதிரான தடை ...

“பயங்கரவாதிகளுக்கு எதிரான தடை விதிப்பதில் எந்த தயக்கமும் கூடாது” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்த்து போராட அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட ...

உலக வளர்ச்சிக்கு தெற்குலகின் க ...

உலக வளர்ச்சிக்கு தெற்குலகின் குரல் ஏன் முக்கியம்? பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் பேச்சு பிரேசிலில் நடைபெற்றுவரும் பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியா சார்பில் பங்கேற்ற ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ...

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...