மன்னிப்பு கேட்காவிட்டால் ராகுல் மீது நடவடிக்கை – கிரண் ரிஜிஜூ எச்சரிக்கை

 பா.ஜ., எம்.பி.,யை தள்ளிவிட்டதற்கு மன்னிப்பு கேட்காவிட்டால் ராகுல் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பார்லி., விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பார்லிமென்ட் வளாகத்தில் நடந்த போராட்டத்தின் போது, காங்கிரஸ் எம்.பி.,க்களுடன் ஏற்பட்ட மோதலில் பா.ஜ.,வை சேர்ந்த ஒடிசா எம்.பி., சாரங்கி மண்டை உடைந்தது. இன்னொரு பா.ஜ., எம்.பி., முகேஷ் ராஜ்புத் என்பவரும் படுகாயம் அடைந்துள்ளார். அவருக்கு டில்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து கிரண் ரிஜிஜூ அளித்த பேட்டி: ராகுல் தாக்கியதில் பா.ஜ., எம்.பி முகேஷ் ராஜ்புத் காயம் அடைந்து இருக்கிறார். எம்.பி.,க்கு சிறிது ரத்தம் கசிந்துள்ளது. தற்போது மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பா.ஜ., எம்.பி.,யை தள்ளிவிட்டதற்கு மன்னிப்பு கேட்காவிட்டால் ராகுல் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ராகுல் தனது வலிமையை காட்ட, பா.ஜ., எம்.பி.,க்களை தாக்கியது சரியல்ல. காங்கிரஸ் எம்.பி., ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும். நான் ராகுலிடம் கூற விரும்புகிறேன். வன்முறையில் ஈடுபட, ராகுலுக்கு அதிகாரம் வழங்கியது யார்? எம்.பி.க்கள் மீது ராகுலின் உடல்ரீதியான தாக்குதல் கண்டிக்கத்தக்கது.

இது ராகுலின் கோபம், விரக்தியை காட்டுகிறது. ராகுலுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை என்பதைக் காட்டுகிறது. இதற்கு தக்க நடவடிக்கை எடுப்போம் என்று ராகுலிடம் கூற விரும்புகிறேன். நாங்கள் ஜனநாயகத்தில் நம்பிக்கை வைப்பதால் மட்டும், உடல் ரீதியாக பழிவாங்கவில்லை. நாங்கள் எங்கள் உடல் வலிமையை மற்ற எம்.பி.க்களுக்கு எதிராக பயன்படுத்த மாட்டோம். ஏனென்றால் நாங்கள் அதை நம்பவில்லை. நாங்கள் அகிம்சையை நம்புகிறோம். நாங்கள் அகிம்சையில் நம்பிக்கை வைப்பதாலும், ஜனநாயகத்தில் நம்பிக்கை வைப்பதாலும் வன்முறையில் ஈடுபடுவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, ராகுல் மீது போலீசில் புகார் அளிக்க பா.ஜ., கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...