இந்தியா-குவைத் உறவு மேலும் வலுப்படும் : பிரதமர் மோடி

பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக நேற்று  (டிச.,21) குவைத் புறப்பட்டு சென்றார். ‘இந்த பயணம் குவைத்துடனான இந்தியாவின் வரலாற்றுத் தொடர்பை மேலும் வலுப்படுத்தும்’ என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக நேற்று  (டிச.,21) பிரதமர் மோடி குவைத் புறப்பட்டு சென்றார். கடந்த 43 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் குவைத் செல்வது இதே முதன்முறை. இருநாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த இருநாட்டு தலைவர்களும் பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர். இந்திய தொழிலாளர்கள் தங்கியுள்ள முகாமிற்கு சென்று பிரதமர் மோடி பார்வையிடுகிறார். குவைத் வாழ் இந்தியர்களிடம் பிரதமர் உரையாற்ற உள்ளார்.

இந்நிலையில், சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இன்றும், நாளையும் நான் குவைத் செல்கிறேன். இந்த பயணம் குவைத்துடனான இந்தியாவின் வரலாற்றுத் தொடர்பை மேலும் வலுப்படுத்தும். குவைத் நாட்டின் இளவரசர் மற்றும் குவைத் பிரதமரை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். இன்று மாலை நான் அங்குள்ள இந்திய சமூகத்தினருடன் உரையாடுவேன், அரேபிய வளைகுடா கோப்பையின் தொடக்க விழாவிலும் கலந்துகொள்வேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு பள்ளிகளில் இலவசமாக 3 மொழி க ...

அரசு பள்ளிகளில் இலவசமாக 3 மொழி கற்கும் வாய்ப்பை ஏன் தடுக்கிறீர்கள் – அண்ணாமலை கேள்வி அரசுப் பள்ளிகளில் இலவசமாக மூன்று மொழிகள் கற்கும் வாய்ப்பை ...

தாய் மொழிக்கு முக்கியத்துவம் அ ...

தாய் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் புதிய தஸ்ய கல்வி கொள்கை – மத்திய கல்வி  அமைச்சர் 'புதிய கல்விக் கொள்கை தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அனைத்து ...

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ...

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவோம் – பிரதமர் மோடி அறிவுரை டில்லியில் இன்று (பிப்.,17) அதிகாலை நில அதிர்வு உணரப்பட்ட ...

ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம ...

ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம் ஆண்டுக்குள் ரூ 9 லட்சம் கோடி ஏலக்காய் எட்டும் – பிரதமர் மோடி உறுதி 'ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம் ஆண்டுக்குள் ரூ.9 ...

யாரையும் புண்படுத்த மாட்டோம் R ...

யாரையும் புண்படுத்த மாட்டோம் – ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் 'யாரையும் புண்படுத்தும் விஷயங்களை நாங்கள் செய்ய மாட்டோம்' என ...

வாரணாசியில் தமிழ்ச் சங்கம் நடப ...

வாரணாசியில் தமிழ்ச் சங்கம் நடப்பது மகிழ்ச்சி – பிரதமர் மோடி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் தமிழ்ச் சங்கமம் நடப்பது ...

மருத்துவ செய்திகள்

சங்கிலையின் மருத்துவக் குணம்

சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ...

தேனின் மருத்துவ குணங்கள்

தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ...

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...