ஜெர்மனியில் நடந்த கொடூர தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்

ஜெர்மனி சந்தையில், நடந்த கொடூரமான தாக்குதலுக்கு மத்திய வெளியுறவுத் துறை கண்டனம் தெரிவித்துள்ளது.

ஜெர்மனியில் பரபரப்பான கிறிஸ்துமஸ் சந்தையில் சொகுசு கார் புகுந்ததில், ஐந்து பேர் பலியாகினர்; 70 பேர் காயமடைந்தனர். காரை தாறுமாறாக ஓட்டிய சவுதி அரேபியா டாக்டர் கைது செய்யப்பட்டார்; இதில் பயங்கரவாதிகளின் பின்னணி உள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தில் இந்தியர்கள் ஏழு பேரும் காயம் அடைந்துள்ளனர்.

இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் சந்தையில் நடந்த கொடூரமான தாக்குதலை நாங்கள் கண்டிக்கிறோம். பல விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாகியுள்ளன, பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த இந்தியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் தொடர்பில் உள்ளோம்.

அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்திய தூதரகம் செய்து கொடுத்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணம் அடைய பிரார்த்தனை செய்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவ ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவதை மக்கள் விரும்ப வில்லை பிஹார் சட்டப் பேரவைத்தேர்தலை முன்னிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது ப ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது போல் இருக்கிறது பிரதமரின் பயிர்காப்பீடு திட்டத்தின் செயல்பாடு குறித்து மத்திய வேளாண் ...

உங்​களின் தந்​தை​ பெயரை சொல்ல ...

உங்​களின் தந்​தை​ பெயரை சொல்ல  வெட்​கப்​ படு​கிறீர்​களா ? பிஹாரின் தேர்​தல் பிரச்​சார சுவரொட்​டிகளில் இந்த மாநிலத்​தில் காட்​டாட்​சிக்கு ...

சாத் பண்டிகைக்கு யுனெஸ்கோ அங்க ...

சாத் பண்டிகைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் பெற முயற்சிக்கிறோம் பீஹார்தேர்தலில் ஓட்டுக்களை பெறுவதற்காக, காங்கிரஸ், ஆர்ஜேடி தலைவர்கள் என்னை ...

மருத்துவ செய்திகள்

அதிமதுரத்தின் மருத்துவக் குணம்

இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ...

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...