இளைஞர்களின் திறமைக்கு வழிவகுப்பதே நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் -மோடி

“நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதற்கு இளைஞர்களின் திறமைகளை வளர்ப்பது மிகவும் அவசியமானது. அதற்கான பொறுப்பு நாட்டின் கல்வி முறைக்கு உள்ளது,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.மத்திய அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அதைச் சார்ந்த அமைப்புகளில் பணியாற்ற புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 71,000 பேருக்கு பணி நியமன ஆணையை, பிரதமர் மோடி நேற்று வழங்கினார்.

‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது:

நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்ல இளைஞர்களின் திறமைகளை வளர்ப்பது அவசியம். அதற்கான பொறுப்பு நம் கல்வி முறைக்கு உள்ளது. எனவே தான் புதிய இந்தியாவைக் கட்டியெழுப்புவதற்கு நவீன கல்வி முறையின் அவசியத்தை தேசம் பல ஆண்டு களாக உணர்ந்துள்ளது.
தேசிய கல்வி கொள்கையின் வாயிலாக நம் தேசம் அந்த திசை நோக்கி நகர துவங்கியுள்ளது. முன்னர், பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக, கல்வி முறை பெரும்பாலும் மாணவர்களுக்கு சுமையாக இருந்தது. ஆனால் இப்போது அது புதிய வாய்ப்புகளையும், விருப்பங்களையும் வழங்குகிறது.
கிராமப்புறங்களில் இருந்து வரும் தலித், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின சமூக மாணவர்களுக்கு கல்வி கற்பதில் மொழி மிகப்பெரிய தடைக்கல்லாக இருந்தது. தற்போது, தாய்மொழியிலேயே கல்வி கற்பிக்கப்படுவதுடன், அதிலேயே தேர்வு எழுதவும் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
அரசுப் பணிக்கான தேர்வுகளை மாணவர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப, 13 மொழிகளில் எழுத வாய்ப்பளிக்கப்படுகிறது. எல்லைப்புறங்களில் வசிக்கும் இளைஞர்களுக்கு நிரந்தர அரசு வேலை கிடைப்பதற்காக, சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.

அந்த வகையில், 50,000 இளைஞர்களுக்கு மத்திய ஆயுதப்படையில் பணி வழங்கப்பட்டுள்ளது. கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் கொள்கை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

மத்திய அரசின், ‘கோபர்தன் யோஜனா’ திட்டத்தின் கீழ், பசும் சாண உயிர் வாயு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்வது மட்டுமின்றி, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பும் பெற்றுள்ளனர். பெட்ரோலுடன் எத்தனால் கலப்பு 20 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதால், கரும்பு சாகுபடி விவசாயிகளுக்கு வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது.

இன்றைக்கு பணி நியமன ஆணை பெற்றவர்களில், பெண்களும் கணிசமான எண்ணிக்கையில் இடம் பெற்றுள்ளனர். நீங்கள் பெற்றுள்ள வெற்றி பல பெண்களுக்கு ஊக்கமாக அமையும். பல பள்ளிகளில், பெண்களுக்கு தனி கழிப்பறை இல்லாததால், பாதியிலேயே பள்ளிப்படிப்பை நிறுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டனர். துாய்மை இந்தியா திட்டத்தால் அந்த பிரச்னைக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. அரசு திட்டங்களில் நேரடியாக பலன் அடைவதற்காக, 30 கோடி பெண்களுக்கு, ‘ஜன் தன்’ கணக்கு துவங்கப்பட்டுள்ளது. ‘முத்ரா யோஜனா’ திட்டத்தின் கீழ், பெண்களுக்கு உத்தரவாதமின்றி கடன் வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி; தே.ஜ., ...

''தமிழகத்தில் நிச்சயம் தே.ஜ, கூட்டணி வெற்றி பெறும். கூட்டணி ...

இந்திய வான்வெளி பாதுகாப்பில் ப ...

இந்திய வான்வெளி பாதுகாப்பில் புதிய மைல்கல்: அஸ்தரா ஏவுகணை வெற்றிகரமாக சோதனை பார்வைக்கு அப்பால் இருக்கும் வான் இலக்குகளை துல்லியமாக தாக்கி ...

51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை : ...

51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை : இன்று மோடி வழங்குகிறார் பிரதமரின் ரோஜகார் திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் பேருக்கு ...

சீனா செல்கிறார் மத்திய அமைச்சர ...

சீனா செல்கிறார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் : 5 ஆண்டுகளில் இது முதல்முறை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீனா செல்ல உள்ளதாக ...

75 வயது ஒய்வு ஊடகங்கள் பரப்பும் வ ...

75 வயது ஒய்வு ஊடகங்கள் பரப்பும் வதந்தி ஆர்.எஸ்.எஸ். சர்சங்கசாலக் மோகன் பாகவத், சங்கத்தின் முக்கிய நிர்வாகியாக ...

பக்தையாகவே சென்றேன் பலம் காட்ட ...

பக்தையாகவே சென்றேன் பலம் காட்டினார் பெருந்தகை என் அப்பன் முருகன் திருச்செந்தூர் முருகன் குடமுழுக்கு விழா. ...

மருத்துவ செய்திகள்

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ...

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...