44,605 கோடி செலவில் செயல்படுத்தப்பட உள்ள கென்-பெட்வா நதிகள் இணைப்பு திட்டத்திற்கு மோடி அடிக்கல்

​முன்​னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்​தநாளை முன்னிட்டு நினைவு அஞ்சல்​தலை, நாணயத்தை வெளி​யிட்ட பிரதமர் நரேந்திர மோடி, ரூ.44,605 கோடி​யில் செயல்​படுத்​தப்பட உள்ள கென்​-பெட்வா நதிகள் இணைப்பு திட்​டத்​துக்கு அடிக்கல் நாட்டினார்.

முன்​னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் 100-வது பிறந்​தநாள் நேற்று கொண்​டாடப்​பட்​டது. இதையொட்டி, டெல்​லி​யில் உள்ள அவரது நினை​விடத்​தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்​சர்கள் உள்ளிட்​டோர் மலர் தூவி மரியாதை செலுத்​தினர்.

இதையடுத்து, மத்திய பிரதேச மாநிலம் கஜுராஹோ சென்ற பிரதமர் மோடி, அங்கு நடைபெற்ற நிகழ்ச்​சி​யில் வாஜ்பாய் நினைவு அஞ்சல்​தலை, நாணயத்தை வெளி​யிட்​டார். பின்னர், கென் – பெட்வா ஆறுகள் இணைப்பு திட்​டத்​துக்கு அடிக்கல் நாட்​டி​னார். மாநில முதல்வர் மோகன்யாதவ், மத்திய நீர்​வளத் துறை அமைச்சர் சி.ஆர்​.பாட்​டீல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

ரூ.44,605 கோடி​யில் செயல்​படுத்​தப்பட உள்ள இந்த திட்​டத்​தின்​கீழ் தவுதான் அணை கட்டப்​படும். அங்கிருந்து இரு ஆறுகளுக்கு இடையே 221 கி.மீ. தூரத்​துக்கு இணைப்பு ஏற்படுத்​தப்​படும். இதன்​மூலம் மத்திய பிரதேசத்​தின் 10 மாவட்​டங்களை சேர்ந்த 44 லட்சம் பேருக்​கும், உத்தர பிரதேசத்​தின் 21 லட்சம் பேருக்​கும் குடிநீர் விநி​யோகம் செய்​யப்​படும்.

இதுதவிர, சுமார் 2 ஆயிரம் கிராமங்களை சேர்ந்த 8.11 ஹெக்​டேர் நிலம் நீர்ப்​பாசன வசதியை பெறும். இதன்​மூலம் 7.18 லட்சம் விவசாய குடும்​பங்கள் பயனடை​யும். மேலும் நீர்​மின்​சக்தி திட்டம் மூலம் 103 மெகாவாட் மின்​சா​ரத்​தை​யும், சூரிய மின்​சக்தி திட்டம் மூலம் 27 மெகாவாட் மின்​சா​ரத்​தை​யும் உற்பத்தி செய்ய இந்த திட்டம் வகை செய்​யும். இதுதவிர, மத்திய பிரதேசத்​தின் கந்த்வா நகரில் நிறு​வப்​பட்​டுள்ள ஓம்காரேஷ்வர் மிதக்​கும் சூரிய மின்​சக்தி திட்​டத்​தை​யும் பிரதமர் மோடி நேற்று காணொலி வாயிலாக தொடங்கி வைத்​தார்.

வெள்ளம் மற்றும் வறட்சிக்கு தீர்வாக, நாட்​டில் உள்ள நதிகளை இணைக்​கும் திட்​டத்தை வாஜ்பாய் தலைமையிலான அரசு முன்​மொழிந்​தது. இதன் முதல் திட்​டமாக கென் ​- பெட்வா ஆறுகள் இணைப்பு இருக்​கும் என கருதப்​படு​கிறது. 1,153 கிராம சேவா சதன்களை ரூ.437 கோடி​யில் கட்டு​வதற்கான திட்​டத்​துக்​கும் பிரதமர் மோடி பூமி பூஜை செய்​தார்.

இதைத் தொடர்ந்து நடந்த பொதுக்​கூட்​டத்​தில் பிரதமர் மோடி பேசி​ய​தாவது: சுதந்​திரத்​துக்கு பிறகு, பாபாசாகேப் அம்பேத்​கரின் தொலைநோக்கு பார்வை இந்தியா​வின் நீர்​வளம் மற்றும் நீர் சேமிப்பு முயற்சி​களுக்கு வழிகாட்​டியது. அவரது முயற்​சியால் ​தான் இன்றும்கூட மத்திய நீர்வள ஆணையம் இயங்​கு​கிறது.

ஆனால், காங்​கிரஸ் கட்சி அவருக்கு உரிய அங்கீ​காரம் தர​வில்லை. நாட்டை ஆட்சி செய்வது தங்கள் பிறப்பு​ரிமை என்று காங்​கிரஸ் நம்பியது, ஆனால், நல்லாட்சி வழங்க தவறி​விட்​டது. மக்களுக்கு நன்மை செய்யாத அறிவிப்புகளை வெளி​யிடு​வ​தில் அவர்கள் கைதேர்ந்​தவர்​கள். காங்​கிரஸ் ஆட்சி​யின்​போது அடிக்கல் நாட்​டப்​பட்ட பல திட்​டங்கள் முடிவடைய 35 முதல் 40 ஆண்டுகள் வரை தாமதம் ஆனது.

மத்திய அரசு தற்போது செயல்​படுத்தி வரும் பிரதமரின் விவசா​யிகள் நிதி​யுதவி திட்​டம், மத்திய பிரதேச அரசு செயல்​படுத்​தும் மகளிர் நிதி​யுதவி திட்டம் ஆகிய​வற்​றால் விவசா​யிகளும், பெண்​களும் பயனடைந்து வருகின்​றனர். வாஜ்பா​யின் தொலைநோக்கு பார்வை என்னை போன்ற ஆர்வலர்கள் உட்பட பல தலைமுறை​யினருக்கு உத்வேகம் அளித்​துள்ளது. நாட்​டின் முன்னேற்​றத்​தில் அவரது பங்களிப்பு எப்போதும் நினை​வு​கூரப்​படும். மக்​கள் நலனில் கவனம் செலுத்து​வ​தி​லும், அரசின் ​திட்​டங்​கள் மக்​களுக்கு பயனளிப்​பதை உறுதி செய்​வ​தி​லும்​தான் பாஜக​வின் வெற்​றி உள்​ளது. இவ்​வாறு பிரதமர்​ மோடி பேசினார்​.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ...

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.