பாதிக்கப்பட்ட பெண்ணை தரக்குறைவாக பேசும் தைரியம் யார் தந்தது – அண்ணாமலை கேள்வி

குற்றவாளி தங்கள் கட்சிக்காரன் என்பதற்காக, பாதிக்கப்பட்ட மாணவியைத் தரக்குறைவாகப் பேசும் தைரியம் யார் தந்தது? என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னை மாநகராட்சி திமுக கவுன்சிலர், பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவி பற்றிப் பேசிய வீடியோவை பகிர்ந்து, அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அண்ணா பல்கலைக்கழக மாணவி, திமுக நிர்வாகியால், பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதை அடுத்து, தமிழகம் முழுவதுமே, பெண்கள் பாதுகாப்பு குறித்த கேள்வி எழுந்திருக்கும் நிலையில், சென்னை மாமன்றக் கூட்டத்தில், சென்னை மாநகராட்சி 184 ஆவது வார்டு உறுப்பினரும், 14ம் மண்டலக் குழுத் தலைவருமான எஸ்.வி.ரவிச்சந்திரன், பாதிக்கப்பட்ட மாணவியை, மிகவும் கொச்சையாக விமர்சனம் செய்த காணொளி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

குற்றவாளி தங்கள் கட்சிக்காரன் என்பதற்காக, பாதிக்கப்பட்ட மாணவியைத் தரக்குறைவாகப் பேசும் தைரியம் யார் தந்தது? இந்த எஸ்.வி.ரவிச்சந்திரன் என்ற நபர், கடந்த நில ஆக்கிரமிப்புக்குப் பெயர் போன 2006 – 2011ம் ஆண்டில் திமுக ஆட்சியில், பெருங்குடி மற்றும் வேளச்சேரி பகுதிகளில் உள்ள காலி இடங்கள், கட்டிடங்களை எல்லாம் நில ஆக்கிரமிப்பு செய்த குற்றத்திற்காக, குண்டாஸ் வழக்கில் கைதானவர்.

பஞ்சுச் சாட்டையா?
ஒட்டு மொத்த அயோக்கியர்களின் புகலிடமாக இருக்கும் திமுகவில், இது போன்ற நபர்களை மாமன்றத்திற்கு அனுப்பியதில் ஆச்சரியமில்லை. பஞ்சினால் செய்த சாட்டை என்கிறார் இந்த ரவிச்சந்திரன். கோவையில் எனது இல்லத்தில் இருக்கும் அந்தச் சாட்டையைக் கொண்டு வருகிறேன். பஞ்சுச் சாட்டைதானே. அவர் மீதே சோதித்துப் பார்க்கலாம். தயாரா? என அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

முதல்வர் மருந்தகம் இல்ல… ‘ம ...

முதல்வர் மருந்தகம் இல்ல… ‘முதல்வர் மாவகம்’ ; அண்ணாமலை விமர்சனம் முதல்வர் மருந்தகங்களில் மாவு விற்கப்படும் நிலையில், இதற்குப் பேசாமல், ...

பேட்ச் வொர்க் செய்த கட்டடத்தை த ...

பேட்ச் வொர்க் செய்த கட்டடத்தை திறந்த முதல்வர்; அண்ணாமலை குற்றச்சாட்டு அவசர அவசரமாக பேட்ச் வொர்க் செய்த கட்டடத்தை முதல்வர் ...

விரத மாலை அணிந்தார் நயினார் நாக ...

விரத மாலை அணிந்தார் நயினார் நாகேந்திரன் மதுரையில் நாளை மறுநாள் நடக்கும் முருகன் மாநாடு சிறப்பாக ...

காவல்துறையினர் பதவி உயர்விலும ...

காவல்துறையினர் பதவி உயர்விலும் ஏமாற்று வித்தை: தமிழக அரசுக்கு அண்ணாமலை கண்டனம் திமுகவின் ஏமாற்று வித்தை, காவல்துறையினர் பதவி உயர்விலும் தொடர்வதாக ...

குடும்பத்தில் மட்டுமே வளர்ச்ச ...

குடும்பத்தில் மட்டுமே வளர்ச்சி -பிரதமர் மோடி சொந்த குடும்பத்தில் மட்டும் வளர்ச்சியுள்ளதாக ஆர்ஜேடி - காங்கிரஸ் ...

ஜி7 நாட்டு தலைவர்களுக்கு பிரதமர ...

ஜி7 நாட்டு தலைவர்களுக்கு பிரதமர் மோடி வழங்கிய பரிசுப் பொருட்கள் ஜி7 உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, கனடா, பிரான்ஸ், ...

மருத்துவ செய்திகள்

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...

ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ...