இண்டர்போல் உதவியை நாட பாரத்போல் தளம் துவக்கி வைப்பு

‘இன்டர்போல்’ எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பின் உதவியை உடனடியாக பெறும் வகையில், ‘பாரத்போல்’ எனப்படும் புதிய ஆன்லைன் தளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இன்டர்போல் எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பில், 195 நாடுகள் இடம்பெற்றுள்ளன.

வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் சர்வதேச குற்றவாளிகளையும் மற்றும் சொந்த நாட்டை விட்டு தப்பிச் செல்லும் குற்றவாளிகளைப் பிடிப்பதற்கும், இந்த அமைப்பு உதவுகிறது. இது தவிர, சர்வதேச அளவில் நடக்கும் குற்றங்கள், முக்கிய குற்றவாளிகள் உள்ளிட்ட விபரங்கள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.

இந்த அமைப்புடன் தொடர்பு கொள்ளும் நேரடி முகமையாக தற்போது, நம் நாட்டின் சார்பில் சி.பி.ஐ., செயல்படுகிறது. இதில் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளன; கால விரயமும் ஏற்படுகிறது. இதைத் தடுக்கும் வகையில், சி.பி.ஐ., சார்பில், பாரத்போல் என்ற புதிய ஆன்லைன் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், மாநில போலீஸ் மற்றும் பிற விசாரணை அமைப்புகளும், தங்களுடைய கோரிக்கைகளை நேரடியாக இன்டர்போல் அமைப்பிடம் வைக்க முடியும்.

வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற குற்றவாளிகளை பிடிப்பதற்கு உதவி கேட்பதுடன், நம் நாட்டில் பதுங்கியிருக்கும் வெளிநாடுகளைச் சேர்ந்த குற்றவாளிகள் குறித்தும் மாநில போலீஸ் மற்றும் பிற விசாரணை அமைப்புகள் தெரிந்து கொள்ள முடியும். இதைத் தவிர, சர்வதேச அளவில் நடக்கும் குற்றங்கள், குற்றவாளிகள் தொடர்பான தகவல்கள் கிடைப்பதால், உள்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும், மாநில போலீஸ் உள்ளிட்ட அமைப்புகளுக்கு உதவும்.

இந்த புதிய இணையதளத்தை, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டில்லியில் நேற்று துவக்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில், சிறப்பான சேவையாற்றிய, 35 சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு, ஜனாதிபதி போலீஸ் விருதுகளை அமித் ஷா வழங்கினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்ம ...

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பு – பாஜக வெளிநடப்பு வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்த ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்தொகுப்பு உத்தரப்பிரதேசத்தில் ரம்ஜானை முன்னிட்டு முஸ்லிம்களுக்காக 32 லட்சம் பரிசுத் ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிற ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிறகு காஷ்மீர் முதல் ரயில் சேவையை பெறுகிறது நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கு அதன் முதல் ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் மு ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் முன்னாள் ஈ டி இயக்குனர் பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் முழுநேர ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோ ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோம் – முகம்மது யூனுஸீக்கு பிரதமர் மோடி கடிதம் இந்தியா - வங்கதேசம் இடையேயான பகிரப்பட்ட வரலாற்றுக்கும், தியாகத்துக்கும் ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உத ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உதவுகிறார் – யோகி ஆதித்யநாத் ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் ...

மருத்துவ செய்திகள்

எலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க

நோய் எதிர்ப்புச்  சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது  எலும்பு மஜ்ஜை ...

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு

சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ...

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...