திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ; பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பா.ஜ., புறக்கணித்தது தொடர்பான கேள்விக்கு, ‘தி.மு.க., நேர்மையான போர் வீரன் அல்ல’ என பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை தெரிவித்தார்.

இது குறித்து சென்னையில் நிருபர்கள் சந்திப்பில், தமிழிசை கூறியதாவது: கவர்னரும், முதல்வரும், தங்களது கருத்து வேறுப்பாட்டை விட்டு, அமர்ந்து ஒற்றுமையாக, தோழமையுடன் பேசி துணை வேந்தர்கள் போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என நான் நினைத்து கொள்கிறேன்.

சீமானின் ஈ.வெ.ரா பற்றிய கருத்துக்கள் எல்லாம் பா.ஜ.,வின் கருத்துக்கள். காலம் காலமாக பா.ஜ., சொல்லி வந்த கருத்து தான். ஆகையால் எங்களது கருத்தியலை சீமான் பேச ஆரம்பித்து இருக்கிறார் என்பது எங்களுக்கு மகிழ்ச்சி தான்.

ஆகையால் இனிமேல் ஈ.வெ.ரா.,வை பற்றிய பிம்பம் ஒவ்வொன்றாக உடைய ஆரம்பிக்கும் எனது கருத்து. பா.ஜ.,வின் பி டீம் எல்லாம் சீமான் கிடையாது. எங்களது ‘தீம்’. எங்களது ‘தீம்’ ஐ அவர் பேசுகிறார். அவ்வளவு தான். அனைவருக்கும் தனி தனி கொள்கை இருக்கிறது.

ஆரோக்கியமான கருத்தை அவர் பதிவு செய்கிறார். உண்மை என்றாவது வெளிவரும். அண்ணாதுரை வளர்த்த தமிழ் அல்ல. ஆண்டாள் வளர்த்த தமிழ். ஈ.வெ.ரா வளர்த்த தமிழ் அல்ல. பெரியாழ்வார் வளர்த்த தமிழ். ஈ.வெ.ரா., குறித்து சீமான் கேட்டு இருப்பது நல்ல கேள்வி. இவ்வாறு தமிழிசை கூறினார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பா.ஜ., புறக்கணித்தது தொடர்பான கேள்விக்கு, தமிழிசை அளித்த பதில்: பா.ஜ.,வின் போட்டியை ஏற்றுக்கொள்ளும் தகுதி தி.மு.க.வுக்கு இல்லை. போர்க்களத்தில் தி.மு.க., நேர்மையான போர்வீரன் அல்ல. முதுகில் குத்துபவர்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி; தே.ஜ., ...

''தமிழகத்தில் நிச்சயம் தே.ஜ, கூட்டணி வெற்றி பெறும். கூட்டணி ...

இந்திய வான்வெளி பாதுகாப்பில் ப ...

இந்திய வான்வெளி பாதுகாப்பில் புதிய மைல்கல்: அஸ்தரா ஏவுகணை வெற்றிகரமாக சோதனை பார்வைக்கு அப்பால் இருக்கும் வான் இலக்குகளை துல்லியமாக தாக்கி ...

51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை : ...

51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை : இன்று மோடி வழங்குகிறார் பிரதமரின் ரோஜகார் திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் பேருக்கு ...

சீனா செல்கிறார் மத்திய அமைச்சர ...

சீனா செல்கிறார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் : 5 ஆண்டுகளில் இது முதல்முறை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீனா செல்ல உள்ளதாக ...

75 வயது ஒய்வு ஊடகங்கள் பரப்பும் வ ...

75 வயது ஒய்வு ஊடகங்கள் பரப்பும் வதந்தி ஆர்.எஸ்.எஸ். சர்சங்கசாலக் மோகன் பாகவத், சங்கத்தின் முக்கிய நிர்வாகியாக ...

பக்தையாகவே சென்றேன் பலம் காட்ட ...

பக்தையாகவே சென்றேன் பலம் காட்டினார் பெருந்தகை என் அப்பன் முருகன் திருச்செந்தூர் முருகன் குடமுழுக்கு விழா. ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:

நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ...

அறுசுவை உணவின் பயன்

உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ...

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...