இந்தியா வந்தார் சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரெத்தினம்

இந்தியா வந்துள்ள சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னத்துக்கு, ஜனாதிபதி மாளிகையில் சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரின் அதிபர் தர்மன் சண்முகரத்னம் அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ளார். அவருக்கு, ஜனாதிபதி மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய வெளி உறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

பிரதமர் மோடியை சிங்கப்பூர் அதிபர் தர்மன் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசிக்க உள்ளார். அப்போது முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.முன்னதாக, கடந்த 2015ம் ஆண்டு சிங்கப்பூரின் அப்போதைய அதிபர் டோனி டன் கிங் யாம், புதுடில்லிக்கு வருகைத் தந்தார். அதன் பின்னர் கடந்த 10 ஆண்டுகளில் சிங்கப்பூர் நாட்டின் அதிபர் இந்தியாவிற்கு வருவது இதுவே முதல்முறை.

நம் அண்டை நாடான இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்னம், ஏற்கனவே சிங்கப்பூர் துணை பிரதமர், நிதியமைச்சர், கல்வி அமைச்சர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வலுவான வணிக உறவுகள்!

இது குறித்து சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முக ரத்னம் கூறியதாவது: சிறிய நாடான சிங்கப்பூர் மற்றும் மிகப்பெரிய நாடான இந்தியா இடையே உறவு வலுவாக இருக்கிறது. இந்தியாவிற்கும், சிங்கப்பூருக்கும் இடையிலான வணிக உறவுகள் செழித்து வருகின்றன.

சிங்கப்பூர் பல ஆண்டுகளாக இந்தியாவில் மிகப்பெரிய முதலீட்டாளராக உள்ளது. இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நான் கட்சித் தொண்டன். இவா்தான் ...

நான் கட்சித் தொண்டன். இவா்தான் என்  தலைவா் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையில் 1980-ஆம் ஆண்டு, ஜனதா ...

தேசியஜனநாயக கூட்டணியில் மீண்ட ...

தேசியஜனநாயக கூட்டணியில் மீண்டும் டிடிவி தினகரன் அதிமுக தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணியில் மீண்டும் டிடிவி தினகரனின் ...

ஆளுநர் சாமர்த்தியமாக தப்பித்த ...

ஆளுநர் சாமர்த்தியமாக தப்பித்துவிட்டார் சட்டசபையில் ஜெயலலிதா அவர்களின் புடவையை கிழிக்க முயன்றார்களே அன்று, ...

நேட்டோ உடைகிறது.. டிரம்ப்பின் ஆ ...

நேட்டோ உடைகிறது.. டிரம்ப்பின் ஆணவத்தால்.. நசுங்கும் அமெரிக்கா? அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், டென்மார்க்கிடமிருந்து கிரீன்லாந்தைக் கைப்பற்றும் ...

டாலருக்கு எதிரான சர்வதேச நிகழ் ...

டாலருக்கு எதிரான சர்வதேச நிகழ்வுகள் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் சரிவு குறித்து மட்டும் ...

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பா ...

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பாஜக – சிவ சேனா’ கூட்டணி வசம் இந்தியாவின் பணக்கார மாநகராட்சியான மும்பை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட ...

மருத்துவ செய்திகள்

வெண் தாமரைப் பூ

இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ...

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...