முதல்வரும், கவர்னரும் வேற்றுமைகளை மறக்க வேண்டும் : முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை

”முதல்வரும், கவர்னரும் தங்களுடைய வேற்றுமைகளை மறந்து, இருவரும் அமர்ந்து பேசி மாநில பிரச்னைளை விவாதித்து முடிவெடுக்க வேண்டும்,” என, தெலுங்கானா மாநில முன்னாள் கவர்னரும், தமிழக பா.ஜ., முன்னாள் தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள தமிழிசை சவுந்தரராஜன் இல்லத்தில் பொங்கல் விழா நேற்று நடந்தது. விழாவில், பா.ஜ., நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். நிருபர்களுக்கு, தமிழிசை சவுந்தரராஜன் அளித்த பேட்டி:

கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், பொங்கல் பரிசை அதிகமாக கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியவர், முதல்வர் ஸ்டாலின். தற்போது பொங்கல் பரிசு கொடுக்க முன்வராமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழக மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்படுகின்றனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க.,வை, அனைத்து கட்சிகளும் புறக்கணித்துள்ளன.

கவர்னருக்கும், முதல்வருக்கும் இடையே கருத்து மோதல் தொடர்கிறது. இதுபோன்ற கருத்து வேற்றுமைகள் மாநில மக்களுக்கு பலன் தராது என்பதால், இருவரும், தங்களது வேற்றுமைகளை மறந்து, மாநில பிரச்னைகளை பற்றி விவாதித்து முடிவு எடுக்க வேண்டும்.

தெலுங்கானாவில், சந்திரசேகரராவ் முதல்வராக இருந்த போது, பிரதமர் மோடி வந்தால் அவரை வரவேற்க வரமாட்டார். முதல்வர் ஸ்டாலினை போலவே, மத்திய அரசின் திட்டங்களையும், சந்திர சேகரராவ் எதிர்த்து வந்தார். அதனால் தான், இன்று அவர் வீட்டில் இருக்கிறார்.

மத்திய அரசின் திட்டங்களை, தமிழக அரசு மறுப்பது நல்லதல்ல. துணை வேந்தரை எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும் என, மத்திய அமைச்சர் ஒரு வரைவை கொடுத்திருக்கிறார்.

இந்த வரைவு வருவதற்கு முன்பே, அதை சட்டமாக்கிவிட்டதை போல, தமிழக அரசு நாடகமாடுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ., டிபாசிட் வாங்காது என அமைச்சர்கள் கூறுவதை பற்றி, நாங்கள் கவலைப்பட போவதில்லை. தேர்தலில் பா.ஜ., போட்டியை ஏற்றுக்,கொள்ளும் தகுதி, தி.மு.க.,வுக்கு இல்லை.

தி.மு.க.,வில் நேர்மையான போர் வீரர்களே இல்லை. முதுகில் குத்துபவர்களாக உள்ளனர். ஈ.வெ.ரா., சமூக சீர்த்திருத்தவாதி இல்லை என பா.ஜ., தலைவர்கள் ஏற்கனவே பலமுறை பதிவு செய்துள்ளனர். தற்போது சீமானும் பதிவு செய்வது வரவேற்கத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ட்ரம்ப் உடன் அற்புதமான சந்திப் ...

ட்ரம்ப் உடன் அற்புதமான சந்திப்பு – பிரதமர் மோடி நெகிழ்ச்சி 'வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்புடன் நடந்த சந்திப்பு அற்புதமானதாக ...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்த ...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்தித்தார் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் டொனால்டு ...

உளவுத்துறை அதிபர் துளசியுடன் ப ...

உளவுத்துறை அதிபர் துளசியுடன் பிரதமர் மோடி சந்திப்பு வாஷிங்டன் அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, புதிதாக ...

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந் ...

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந்தியா- தாய்லாந்து உறவு -பிரதமர் மோடி 'இந்தியாவும், தாய்லாந்தும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான ஆழமான ...

மோடி ஆட்சியில் தன்னிறைவு பெற்ற ...

மோடி ஆட்சியில் தன்னிறைவு பெற்ற இந்தியா – பாஜக எம் பி தேஜஸ்வி சூர்யா பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாடு தன்னிறைவு அடைந்து ...

பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரச ...

பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கவில்லை – நிர்மலா சீதாராமன் ''பா.ஜ., ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்ற ...

மருத்துவ செய்திகள்

பித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)

பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ...

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...