திறன் மேம்பாட்டில் இந்தியா இரண்டாவது இடம் – பிரதமர் மோடி மகிழ்ச்சி

செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் பசுமை தொழில்கள் உள்ளிட்ட எதிர்காலத்துக்கு தேவையான திறன் மேம்பாட்டில் இந்தியா இரண்டாவது இடம் பிடித்து உள்ளது.

பிரிட்டனை சேர்ந்த கியூஎஸ்(QS) என்ற உயர்கல்வி குறித்த அமைப்பு ஆண்டுதோறும், பல்கலைகள் மற்றும் கல்லூரிகள் குறித்து பட்டியல் வெளியிட்டு வருகிறது. எதிர்கால வேலை சந்தைக்கான தேவைகளை கருத்தில் கொண்டு, நாடுகள் எவ்வாறு தங்களை தயார்படுத்தி வருகின்றன என்பது குறித்த பட்டியலை இந்த அமைப்பு வெளியிட்டு உள்ளது. இதன்படி எதிர்கால திறன் போட்டியாளர் பிரிவில் இந்தியா 25வது இடத்தில் உள்ளது.அதேநேரத்தில், எதிர்கால வேலைக்கான திறன் மேம்பாட்டில் இந்தியா இரண்டாவது இடம் பிடித்துள்ளது.

இதற்கான ஆய்வு 190 நாடுகளில் 28 கோடி பணியிடங்களிலும், 5 ஆயிரம் பல்கலைகளிலும், 50 லட்சம் பணியாளர்களிடமும் ஆய்வு நடத்தப்பட்டது.

இதற்கு மகிழ்ச்சி தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த பத்து ஆண்டுகளில், இந்திய இளைஞர்களை சுயசார்புடையவர்களாக, வளங்களை உருவாக்க உதவும் திறன்களை கொண்டு உள்ளவர்களாக, மத்திய அரசு வலிமைப்படுத்தி வருகிறது. கண்டுபிடிப்புகள் மற்றும் புதுமைக்கான மையமாக இந்தியாவை மாற்ற தொழில்நுட்பத்தின் சக்தியை பயன்படுத்தி உள்ளோம். இளைஞர் முன்னேற்றத்திற்கான பாதையில் இந்தியா முன்னேறும் நேரத்தில் இந்த அறிக்கை முக்கியமானது. இவ்வாறு அந்த அறிக்கையில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மிரட்டும் எலி காய்ச்சல்

மிரட்டும் எலி காய்ச்சல் கேரளாவில் லெப்டோஸ்பிரோசிஸ் (எலி காய்ச்சல்) தீவிரமாக பரவிவருகிறது. இந்த ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா ந ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மருத்துவ செய்திகள்

ஆண்மையை அதிகமாக்கும் வழிகள்

அரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை 50 கிராம், ...

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ...