அரசு முறை பயணமாக சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் ஒடிசாவுக்கு நேற்று வந்தார்.
தென் கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரின் அதிபர் தர்மன் சண்முக ரத்னம், இரு நாட்கள் அரசு முறை பயணமாக ஒடிசாவுக்கு நேற்று வந்தார்.
தலைநகர் புவனேஸ்வரில் உள்ள பிஜு பட்நாயக் சர்வதேச விமான நிலையத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த மாநில முதல்வர் மோகன் சரண் மஜி, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்உள்ளிட்டோர், அவரை வரவேற்றனர்.
சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னத்தை முதல்வர் மோகன் சரண் மஜி நேற்று மாலை சந்தித்து பேச்சு நடத்தினார்.
அப்போது, திறன் மேம்பாடு, தொழில் உட்கட்டமைப்பு, நிலையான எரிசக்தி உள்ளிட்ட துறைகளில், சிங்கப்பூர் – ஒடிசா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
புரி மாவட்டத்தின் கோனார்க்கில் உள்ள சூரியக் கோவிலையும், புவனேஸ்வரில் உள்ள பாரத் பயோடெக் தடுப்பூசி உற்பத்தி ஆலையையும் சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் இன்று பார்வையிடுகிறார்.
அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ... |
ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும் |
உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ... |