டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடந்த விருந்தில், இந்தோனேசியா அதிபர் பிரபோவோ சுபியாண்டோ, ‘எனக்கு இந்திய டி.என்.ஏ., உள்ளது’ என பேசியது சிரிப்பலையை ஏற்படுத்தியது.
டில்லியில் நடந்த குடியரசு தின விழா கொண்டாட்டத்தில், இந்தோனேசியா அதிபர் பிரபோவோ சுபியாண்டோ சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ஜனாதிபதி மாளிகையில் நேற்று விருந்து நடந்தது. இந்தோனேசியா அதிபருக்கு மரியாதை நிமித்தமாக ஜனாதிபதி திரவுபதி முர்மு விருந்து அளித்தார்.
சிறப்பு விருந்தில் சுபியாண்டோ பேசியதாவது: சில வாரங்களுக்கு முன்பு, டி.என்.ஏ., சோதனை செய்தேன். அவர்கள் என்னிடம் இந்திய டி.என்.ஏ., உள்ளது என்று சொன்னார்கள். நான் இந்திய இசையைக் கேட்டவுடன், நான் நடனமாடத் தொடங்குகிறேன். இந்தியாவும், இந்தோனேசியாவும் நீண்ட, பழமையான வரலாற்றில் ஒற்றுமை உள்ளன.
எங்களிடம் நாகரீக ஒற்றுமை உள்ளன. இப்போதும் கூட நமது மொழியின் மிக முக்கியமான பகுதி சமஸ்கிருதத்திலிருந்து வருகிறது. இந்தோனேசியாவின் பல பெயர்கள் சமஸ்கிருதம் மொழியில் உள்ளன. இது நமது பண்டைக்கால ஒற்றுமை என்று நான் நினைக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
அவரது பேச்சு சிரிப்பலையை வரவழைத்தது. இந்த விருந்தில் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், பிரதமர் மோடி மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது. |
கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ... |
ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ... |