டில்லி சட்டசபை தேர்தலில் அர்விந்த் கெஜ்ரிவால், அதிஷி இருவருக்கும் தோல்வி நிச்சயம் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறி உள்ளார்.
புதுடில்லி சட்டசபை தேர்தல் பிப்.5ம் தேதி நடைபெறுகிறது. 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டு முடிவுகள், பிப்.8ம் தேதி வெளியாகிறது. ஆம் ஆத்மி, பா.ஜ., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சூறாவளி தேர்தல் பிரசாரத்தில் இறங்கி உள்ளன.
இந் நிலையில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது;
பொய் சொல்வது என்பது நீண்ட நாட்கள் நிலைக்காது. 10 ஆண்டுகளில் தற்போதுள்ள ஆட்சியின் அனைத்து பொய்களும் அம்பலமாகிவிட்டன. கிராமங்கள், நகரங்கள், முக்கிய பகுதிகள் அனைத்தும் வளர்ச்சியை இழந்து விட்டன.
டில்லியில் இம்முறை பா.ஜ., ஆட்சி அமைக்கும். கெஜ்ரிவால், அதிஷி இருவரும் தோல்வியை தழுவுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ... |
உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ... |
நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ... |