பாஜக வெற்றி பெற்றால் குடிசைகள் அகற்றப்படாது – பிரதமர் மோடி வாக்குறுதி

டில்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றால், குடிசைகள் அகற்றப்படாது என்று பிரதமர் மோடி வாக்குறுதி அளித்துள்ளார்.

வரும் 5ம் தேதி நடைபெறும் டில்லி சட்டசபை தேர்தலையொட்டி, ஆர்.கே.புரம் பகுதியில் நடந்த பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:- பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், எந்தவொரு மக்கள் நலத்திட்டங்களும் நிறுத்தப்படாது. பொதுமக்களின் விருப்பத்திற்கு ஏற்ப நாங்கள் இணைந்து செயல்படுவோம். எந்தவொரு பயனுள்ள திட்டங்களையும் ரத்து செய்ய மாட்டோம்.

டில்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றால், குடிசைகள் அகற்றப்படாது. இந்த அறிவிப்பை வெற்று பேச்சுக்காக அறிவிக்கவில்லை. ஆனால், ஆம்ஆத்மி குடிசை விவகாரத்தில் பொய் தகவலை பரப்புகின்றனர்.

பூர்வாஞ்சலி மற்றும் பிஹாரி சமூக மக்களின் உணர்வுகளை நான் மதிக்கிறேன். ஏனெனில், நான் பூர்வாஞ்சல் தொகுதி எம்.பி.,யாக இருந்துள்ளேன். கோவிட் சமயத்தில் சில கட்சிகள் அவர்களை மோசமாக நடத்தினார்கள். டில்லியை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றினார்கள். ஆனால், பா.ஜ., எப்போதும், பூர்வாஞ்சல் மற்றும் பிஹார் மக்களுக்கு ஆதரவாக இருக்கும்.

பிஹாரில் உள்ளூர் விவசாயிகளின் நலனுக்காக மஹானா போர்டு உருவாக்கப்பட்டது. மஹானா சாகுபடியில் தலித் குடும்பத்தினர் ஈடுபடுத்தப்படுகின்றனர். எப்போது எல்லாம் தலித் மக்களுக்கான நலத்திட்டங்களை நான் அறிவிக்கிறனோ, அப்போது எல்லாம், எதிர்க்கட்சிகள் என்னை கேலி செய்கின்றனர், இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்ம ...

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பு – பாஜக வெளிநடப்பு வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்த ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்தொகுப்பு உத்தரப்பிரதேசத்தில் ரம்ஜானை முன்னிட்டு முஸ்லிம்களுக்காக 32 லட்சம் பரிசுத் ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிற ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிறகு காஷ்மீர் முதல் ரயில் சேவையை பெறுகிறது நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கு அதன் முதல் ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் மு ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் முன்னாள் ஈ டி இயக்குனர் பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் முழுநேர ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோ ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோம் – முகம்மது யூனுஸீக்கு பிரதமர் மோடி கடிதம் இந்தியா - வங்கதேசம் இடையேயான பகிரப்பட்ட வரலாற்றுக்கும், தியாகத்துக்கும் ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உத ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உதவுகிறார் – யோகி ஆதித்யநாத் ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் ...

மருத்துவ செய்திகள்

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...