டில்லியில் மக்கள் விருப்பம் இதுதான் – ஜெய்சங்கர்

டில்லியில் ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்பும் மனநிலையில் உள்ளனர் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சூசகமாக தெரிவித்தார்.

டில்லியில் முதல்வர் ஆதிஷி தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. 70 தொகுதிகளை கொண்ட டில்லி சட்டசபைக்கு இன்று தேர்தல் நடக்கிறது. காலை 7 மணிக்கு ஓட்டு பதிவு துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தனது மனைவி லட்சுமி பூரியுடன் ஆனந்த் நிகேதனில் உள்ள பள்ளியில் ஓட்டளித்தார்.

டில்லி துக்ளக் கிரசென்ட்டில் உள்ள பள்ளியில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஓட்டளித்தார். பின்னர் அவர் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: நான் ஒரு ஆரம்ப கால வாக்காளராக இருந்தேன். ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்பும் மனநிலையில் உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சில நாட்களில் முன், ”டில்லியில் உள்ள மக்களுக்கு எந்த வசதியும் கிடைக்கவில்லை. வெளிநாடுகளுக்கு செல்லும்போது இந்த உண்மையை சொல்லாமல் மறைத்து விடுகிறேன். வெளியில் சொல்லவே வெட்கமாக இருக்கு,” என, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்ம ...

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பு – பாஜக வெளிநடப்பு வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்த ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்தொகுப்பு உத்தரப்பிரதேசத்தில் ரம்ஜானை முன்னிட்டு முஸ்லிம்களுக்காக 32 லட்சம் பரிசுத் ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிற ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிறகு காஷ்மீர் முதல் ரயில் சேவையை பெறுகிறது நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கு அதன் முதல் ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் மு ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் முன்னாள் ஈ டி இயக்குனர் பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் முழுநேர ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோ ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோம் – முகம்மது யூனுஸீக்கு பிரதமர் மோடி கடிதம் இந்தியா - வங்கதேசம் இடையேயான பகிரப்பட்ட வரலாற்றுக்கும், தியாகத்துக்கும் ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உத ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உதவுகிறார் – யோகி ஆதித்யநாத் ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ...

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...