சென்னை அடுத்த கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வெளியே, ஆட்டோவில் 18 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். அவரது கூக்குரலை கேட்டு, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்த, ஒரு நல்ல மனிதர் சிறுமியை காப்பாற்றி உள்ளார். தமிழகம் முழுதும் பாலியல் வன்கொடுமை, ஒரு பயங்கரமான யதார்த்தமானதாக மாறிவிட்டது.
மேலும், போதைப் பொருள் எளிதில் கிடைக்கக்கூடிய பொருளாக மாறிவிட்டது. கடந்த மூன்று ஆண்டுகளில், தமிழகத்தில் போதைப் பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை, 1,122. கடந்த 2021ல், போதைப் பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை, 9,632.
தமிழகத்தில், கஞ்சா மற்றும் மெத்தம்பேட்டமைன் விற்பனை அதிகரித்து வருகிறது. இதில் தொடர்புடையவர்கள் கைதுகள் குறைந்து வருவது எப்படி? போதைப் பொருள் கடத்தல்காரர்கள் சுதந்திரமாக செயல்படுவதற்காக, தமிழக அரசு வேண்டுமென்றே மெத்தனமாகிவிட்டதா? பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை அதிகாரிகள் உறுதி செய்வதற்கு முன், இன்னும் எத்தனை பேர் பாதிக்கப்படுவரோ?
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ... |
முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ... |