பெண்களுக்கு எதிராக தீங்கு செய்தவர்களுக்கு கடவுள் சரியான தண்டனை கொடுத்துள்ளார் ஸ்வாதி மலிவால்

பெண்களுக்கு எதிராக தீங்கு செய்தவர்களுக்கு (ஆம்ஆத்மி) கடவுள் சரியான தண்டனை கொடுத்துள்ளதாக ராஜ்சபா எம்.பி., ஸ்வாதி மலிவால் தெரிவித்துள்ளார்.

70 தொகுதிகளைக் கொண்ட டில்லி சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் இன்று எண்ணப்பட்டன. பா.ஜ., 48 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆம் ஆத்மி 22 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. குறிப்பாக, முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிஷோடியா ஆகியோர் தோல்வியை தழுவியுள்ளனர். அதேபோல, காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை.

27 ஆண்டுகளுக்குப் பிறகு டில்லியில் பா.ஜ., ஆட்சி அமைக்கிறது. மக்களின் முடிவை ஏற்றுக் கொள்வதாக ஆம்ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டில்லி சட்டசபை வெற்றியை பா.ஜ.,வினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், கெஜ்ரிவாலின் உதவியாளரால் தாக்கப்பட்ட ஆம்ஆத்மியின் ராஜ்யசபா எம்.பி., சுவாதி மலிவால், ஆம்ஆத்மி தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

முன்பு திரவுபதி படத்தை பகிர்ந்து சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்த அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘ நாம் வரலாற்றை கொஞ்சம் பார்க்க வேண்டும். பெண்களுக்கு எதிராக குற்றம்புரிந்தவர்களுக்கு கடவுள் சரியான தண்டனை கொடுப்பார். அதுதான் தற்போதைய தேர்தலில் நடந்துள்ளது. பொய் சொன்னால் மக்கள் நம்பிவிடுவார்கள் என்ற எண்ணம் தான் ஆம்ஆத்மிக்கு இருக்கிறது.

குடிநீர், காற்று மாசுபாடு, மோசமான உள்கட்டமைப்பு, அடிப்படை வசதிகள் இல்லாதது உள்ளிட்டவை தான் ஆம்ஆத்மியின் தோல்விக்கு காரணமாகும். தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ.,வுக்கு வாழ்த்துக்கள். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என்று நம்புகிறேன்,’ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘தேர்தல் யாத்திரை’: பீகாரில் ரூ ...

‘தேர்தல் யாத்திரை’: பீகாரில் ரூ.7,200 கோடி திட்டங்கள். பிரதமர் நரேந்திர மோடி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள ...

சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாள ...

சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாளியை கைது செய்யாதது ஏன்? நயினார் நாகேந்திரன் கேள்வி ஒரு 10 பவுன் நகைக்காக தனிப்படை அமைத்து எவ்வித ...

‘தலித்’ பெயரை வைத்து அரசியல ...

‘தலித்’ பெயரை வைத்து அரசியல் செய்யும் காங்கிரஸ்;பிரதமர் மோடி குற்றச்சாட்டு பீஹாரில் ரூ.7,200 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி ...

லடாக்கில் ஆகாஷ் வான் பாதுகாப்ப ...

லடாக்கில் ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு சோதனை வெற்றி; இந்திய ராணுவம் பெருமிதம் லடாக்கில் சுமார் 15,000 அடி உயரத்தில் ஆகாஷ் வான் ...

ரூ.24,000 கோடியில் விவசாயிகளுக்கு உ ...

ரூ.24,000 கோடியில் விவசாயிகளுக்கு உதவும் புதிய திட்டம்: ஒப்புதல் அளித்தது மத்திய அரசு விவசாயிகளுக்கு உதவும் ரூ.24 ஆயிரம் கோடி தன் தானிய ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்பட ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்படுத்தும் நோக்கில் தேசிய இளையோர் சமையல் போட்டி தொடக்கம் மத்திய சுற்றுலா அமைச்சகத்துடன் இணைந்து பிஎச்டி வர்த்தக மற்றும் ...

மருத்துவ செய்திகள்

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...