சூரிய மின் உற்பத்தியில் மூன்றாவது இடம் – பிரதமர் மோடி

உலகளவில் சூரிய மின் உற்பத்தியில் இந்தியா 3வது இடத்தை பிடித்து உள்ளது,” என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

இந்திய எரிசக்தி வார விழாவின் துவக்க விழாவில் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பேசியதாவது: 21ம் நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டு என நிபுணர்கள் சொல்கின்றனர். இந்தியா தனது வளர்ச்சியை மட்டும் அல்லாமல், உலகத்தையும் முன்னெடுத்துச் செல்கிறது. இதில் நமது எரிசக்திக்கு முக்கிய பங்கு உண்டு.

இந்தியாவின் எரிசக்தி லட்சியங்களுக்கு 5 தூண்கள் துணை நிற்கின்றன. நம்மிடம் இயற்கை வளங்கள், பொருளாதார பலம், அரசியல் ஸ்திரத்தன்மை, புத்திசாலித்தனமான சிந்தனைகள், மூலோபாய புவியியல் மற்றும் உலகளாவிய நிலைத்தன்மை ஆகியன உள்ளன.

வளர்ந்த பாரதத்திற்கு அடுத்த இரண்டு தசாப்தங்கள் முக்கியமானவை. அடுத்த ஐந்தாண்டுகளில் நிறைய சாதனை படைக்கப் போகிறோம். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா, உலகின் 5வது மிகப்பெரிய பொருளாதாரமாக மாறி உள்ளது.

நமது சூரிய மின் உற்பத்தி இருமடங்காக அதிகரித்து உள்ளது. இன்று, சூரிய மின் உற்பத்தியில் இந்தியா 3வது இடத்தை பிடித்து உள்ளது. பாரிஸ் ஜி20 ஒப்பந்தங்களின் இலக்குகளை எட்டிய முதல் நாடு இந்தியா. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...

தியானம் செய்யத் தேவையானவை

நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ...