”ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது, எவ்வித பாகுபாடும் இல்லாததாக, மனிதகுலத்துக்கு பயன் அளிப்பதாக இருக்க வேண்டும்.
”நம்பிக்கை, வெளிப்படைத்தன்மையுடன், அனைவருக்கும் அந்த தொழில்நுட்பம் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் உலகளாவிய கட்டமைப்பை உருவாக்க வேண்டும்,” என, பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான செயல் உச்சி மாநாடு, ஐரோப்பிய நாடான பிரான்சின் பாரிஸ் நகரில் நடக்கிறது. பிரான்சுடன் இணைந்து இந்தியா இதை நடத்துகிறது.
பெரும் மாற்றம்
இதில், பல நாட்டுத் தலைவர்கள், தொழில்நுட்பத் துறை நிறுவனங்களின் உயரதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
இந்த உச்சி மாநாட்டை நேற்று துவக்கி வைத்து, பிரதமர் மோடி பேசியதாவது:
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது, நம் அரசியல், நிர்வாகம், பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் சமூகத்தில் மிகப்பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த நுாற்றாண்டின் மனிதநேயத்துக்கான குறியீட்டை அது வகுத்து வருகிறது.
இந்த தொழில்நுட்பம், யாரும் எதிர்பார்க்காத வேகத்தில் வளர்ந்து வருகிறது. அதைவிட அதிக வேகத்தில் அது பயன்படுத்தப்படுகிறது. அதுபோல நாடுகளுக்கு இடையே ஒருவரை ஒருவர் சார்ந்திருப்பதையும் இது ஆழப்படுத்துகிறது.
மருத்துவம், கல்வி, விவசாயம், அறிவியல் என, பல துறைகளிலும், இந்த தொழில்நுட்பத்தின் பயன்பாடு அபரிமிதமாக உள்ளது. இது கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் பெரும் புரட்சியையும், மாற்றத்தையும் ஏற்படுத்துகிறது.
நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகளை சுலபமாக எட்டுவதற்கு இது உதவுகிறது. இதற்கு, நாம் அனைவரும் நம் வளங்களை, திறன்களை ஒருங்கிணைத்து பயன்படுத்த வேண்டும்.
இந்த தொழில்நுட்பத்தை நாம் ஜனநாயகமாக்க வேண்டும். மக்களின் நலனுக்கானதாக இதை பயன்படுத்த வேண்டும். சைபர் பாதுகாப்பு, பொய் தகவல் பரப்புவது, ‘டீப் பேக்’ போன்ற மோசடிகளை தடுப்பது குறித்து நாம் கவனிக்க வேண்டும்.
ஏ.ஐ., தொழில்நுட்பத்தால், மனிதர்களுக்கான வேலைகள் குறைந்துவிடும் என்பது பொதுவான அச்சமாக உள்ளது. ஆனால், வரலாற்றை பார்க்கும்போது, எந்த ஒரு புதிய தொழில்நுட்பமும், வேலைகளை குறைக்கவில்லை.
நம்பிக்கை
அதே நேரத்தில் வேலை செய்யும் முறையைத்தான் மாற்றியுள்ளது. ஏ.ஐ., தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் வகையில், நம் மக்களின் பணித் திறன்களில் மாற்றம் செய்ய வேண்டும்.
சரியான தகவல்கள், எவ்வித பாகுபாடும் இல்லாத, மனிதகுலத்துக்கு பயன் அளிப்பதாக, ஏ.ஐ., தொழில்நுட்ப தளங்கள் இருக்க வேண்டும்.
பரஸ்பரம் நம்பிக்கை, வெளிப்படைத்தன்மையுடன், அனைவருக்கும் இதன் பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
குறிப்பாக, குளோபல் சவுத் எனப்படும் வளர்ந்து வரும் நாடுகளும் அணுகும் வகையில் பொதுவெளியில் இந்த தொழில்நுட்பத்தின் தரவுகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ... |
வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ... |
கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ... |