இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சரியான நேரம் என பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான உச்சி மாநாடு, ஐரோப்பிய நாடான பிரான்சின் பாரிஸ் நகரில் நடக்கிறது. பிரான்சுடன் இணைந்து இந்தியா இதை நடத்துகிறது. இதில், பல நாட்டுத் தலைவர்கள், தொழில்நுட்பத் துறை நிறுவனங்களின் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதையொட்டி நடந்த, 14வது இந்தியா-பிரான்ஸ் தலைமை நிர்வாக அதிகாரிகள் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்த சந்திப்பு இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே சிறந்த வணிக உறவை ஏற்படுத்தும். 2047ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க நாம் செயல்பட்டு வரும் அதே வேளையில் வலுவான மிக உறவை உருவாக்குவதற்கும் இது சரியான நேரம். நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்படுவதை நான் காண்கிறேன்.
AI, விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தில் இந்தியா பல்வேறு சாதனைகளை செய்து காட்டியுள்ளது. 2047ம் ஆண்டிற்குள் 100 ஜிகாவாட் அணுசக்தியை இலக்காகக் கொண்டு செயல்படுகிறோம். இந்தத் துறை தனியாருக்கும் வழங்கப்பட்டுள்ளது.இன்று இந்தியா வேகமாக உலக அளவில் முதலீடு செய்து வருகிறது.
டந்த தசாப்தத்தில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள நல்ல மாற்றங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றத்தின் பாதையை பின்பற்றி, இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக மாறி உள்ளது. விரைவில் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும்.
உலகளாவிய அரங்கில் எங்களின் அடையாளம் என்னவென்றால், இன்று, இந்தியா ஒரு விருப்பமான உலகளாவிய முதலீட்டு இடமாக மாறி வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
சுந்தர் பிச்சையுடன் சந்திப்பு
தொடர்ந்து கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்துக்காக இணைந்து பாடுபடுவது குறித்து விவாதித்ததாகவும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் இந்தியாவுக்கு கிடைக்கப்போகும் அற்புத வாய்ப்புகள் குறித்து ஆலோசித்ததாகவும், பிரதமர் மோடியுடன் சுந்தர் பிச்சை பதிவிட்டுள்ளார்.
நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ... |