‘யாரையும் புண்படுத்தும் விஷயங்களை நாங்கள் செய்ய மாட்டோம்’ என ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் பேசினார்.
மேற்குவங்கத்திற்கு 10 நாள் பயணமாக ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் சென்றுள்ளார். அங்கு நடந்த நிகழ்ச்சியில் மோகன் பகவத் பேசியதாவது: ஹிந்து அமைப்புகளில் மட்டும் ஏன் இவ்வளவு கவனம் செலுத்த வேண்டும் என்று அடிக்கடி கேட்கிறார்கள். நாட்டின் பொறுப்பான சமூகம் ஹிந்து சமூகம். ஹிந்துக்கள் இந்தியாவின் வாரிசுகள். நாங்கள் இவர்களை ஒன்றிணைக்க விரும்புகிறோம்.
இந்தியாவிற்கு ஒரு இயல்பு உண்டு. ஹிந்துக்கள் உலகின் பன்முகத்தன்மையை ஏற்றுக்கொண்டு வாழ்கிறார்கள். இப்போதெல்லாம் நாம் பன்முகத்தன்மையில் ஒற்றுமை என்று சொல்கிறோம். பன்முகத்தன்மையை ஒற்றுமை என்பதை ஹிந்துக்கள் புரிந்து கொள்கிறார்கள்.
இந்த பண்புகள் இந்தியாவை வரையறுக்கின்றன. யாரையும் புண்படுத்தும் விஷயங்களை நாங்கள் செய்ய மாட்டோம். ஆட்சியாளர்கள், நிர்வாகிகள் தங்கள் வேலையைச் செய்கிறார்கள். சமூகம் நாட்டின் வேலையை செய்ய முன் வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ... |
சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ... |
சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ... |