ஆந்திரா, நாகாலாந்து, ஒடிசா, தெலுங்கானா, திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு ரூ.1,554.99 கோடி பேரிடர் நிவாரண நிதி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கிறது.
இன்று, மத்திய உள்துறை அமைச்சகம் ஆந்திரா, நாகாலாந்து, ஒடிசா, தெலுங்கானா மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு ரூ.1,554.99 கோடி பேரிடர் நிவாரண நிதி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, ஆந்திராவுக்கு ரூ.608.08 கோடியும், நாகலாந்துக்கு ரூ.170.99 கோடியும், ஒடிசாவுக்கு ரூ.225.24 கோடியும், தெலுங்கானாவுக்கு ரூ.231.75 கோடியும், திரிபுராவுக்கு ரூ.288.93 கோடியும் கூடுதல் பேரிடர் நிவாரண நிதி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கனவே 27 மாநிலங்களுக்கு ரூ.18,322.80 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்.
இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ... |
இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ... |
முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ... |