தமிமொழியை கற்றுகொள்ளுங்கள் வெளிமாநிலத்தவர்களுக்கு கவர்னர் அறிவுரை

‘அருணாச்சலப் பிரதேசம், மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பலர் தமிழகத்தில் உள்ளனர். அவர்கள் தமிழ் மொழியை கற்றுக் கொள்ள வேண்டும்,” என கவர்னர் ரவி அறிவுரை வழங்கினார்.

அருணாச்சலப் பிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்கள் உருவான தின விழா, கிண்டி கவர்னர் மாளிகையில் நேற்று நடந்தது. விழாவில், கவர்னர் ரவி பேசியதாவது:

மாநிலங்கள் உருவான தின கொண்டாட்டம், நாடு முழுதும் கொண்டாடப்படுகிறது. இது போன்ற நிகழ்வுகள், கல்லுாரி பொது இடங்களிலும், நடக்க வேண்டும். இந்தியா ஒரு பரந்த நாடு. நிறைய பன்முகத்தன்மை கொண்டது.

நம் நாட்டின் பன்முகத் தன்மைக்கு, எந்த நாடும் நிகராக முடியாது. அருணாச்சலப் பிரதேசம், மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், பலர் தமிழகத்தில் உள்ளனர். அவர்கள் தமிழ் மொழியை கற்றுக் கொள்ள வேண்டும்.

தமிழ் தெரிந்தால், உங்களுக்கு தமிழகம் குறித்த பல தகவல்கள் தெரியவரும். எனக்கு தமிழில் பேசினால் புரிந்து கொள்ள முடியும். செய்தித் தாள்களை படிக்க முடிகிறது. கேரளாவில் பணி செய்யும்போது, மலையாளம் கற்றுக்கொண்டேன்.

தமிழ் நண்பர்கள் மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்களை, விடுமுறை நாட்களில், உங்கள் பகுதிக்கு அழைத்து சென்று, பந்தத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். எனக்கு பல மாநிலங்களில் நட்பு வட்டாரம் உள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில், ரயில் சேவைகள், விமான நிலையங்கள், இன்று ஏராளமாக வளர்ந்து விட்டன. இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும், ஒருங்கிணைக்கப்பட்ட போக்குவரத்து சேவை மேம்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் எதிர்கால பொருளாதார வளர்ச்சிக்கு, மாநிலங்களின் பந்தம் முக்கியமானதாக இருக்கிறது. வடகிழக்கு மாநிலங்கள், இந்தியாவின் எதிர்காலம் என்ற அளவுக்கு மனிதவளம், இயற்கை வளங்கள் உள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

முள்ளங்கியின் மருத்துவக் குணம்

முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ...

எட்டியின் மருத்துவ குணம்

எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ...

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...