டில்லியில் பாஜக ஆட்சி : தலைவர்களின் கருத்து

27 ஆண்டுக்குப் பின், டில்லியில் பா.ஜ., ஆட்சி அமைத்துள்ளது. டில்லியின் முதல்வராக ரேகா குப்தா பதவியேற்று கொண்டார். இது குறித்து தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன் விபரம் பின்வருமாறு:

பிரதமர் நரேந்திர மோடி
டில்லி முதல்வராக பதவியேற்ற ரேகா குப்தாவுக்கு வாழ்த்துக்கள். இவர் பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றி தற்போது எம்.எல்.ஏ.வாகவும், முதல்வராகவும் உயர்ந்து உள்ளார். டில்லியின் வளர்ச்சிக்காக அவர் முழு வீச்சுடன் பாடுபடுவார் என்று நான் நம்புகிறேன்.

டில்லி முதல்வர், ரேகா குப்தா
வாக்குறுதியை நிறைவேற்றுவதே என் வாழ்க்கையின் இலக்கு. பிரதமர் மோடியின் கனவை நிறை வேற்றுவது 48 பா.ஜ., எம்.எல்.ஏ.,க்களின் பொறுப்பாகும்.

கோவா முதல்வர், பிரமோத் சாவந்த்
27 ஆண்டுகளுக்குப் பிறகு, டில்லி மக்களின் நலனுக்காக பாடுபட பா.ஜ.,வுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. பிரதமர் மோடியின் தலைமையில், டில்லி மக்கள் வளர்ச்சிக்காக பா.ஜ.,வினர் பாடுபடுவார்கள்.

டில்லி அமைச்சர், மஞ்சிந்தர் சிங் சிர்சா
பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையை செயல்படுத்துவது எங்களது கடமை. டில்லியை மீண்டும் சுத்தமான குடிநீர் மற்றும் காற்று கொண்ட பகுதியாக மாற்றுவோம். யமுனை நதியை சுத்தம் செய்வோம்.

ராஜஸ்தான் முதல்வர், பஜன்லால் சர்மா

பா.ஜ., அரசு பொதுமக்களின் எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்றும். தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றும்.

டில்லி அமைச்சர், பர்வேஷ் வர்மா
எனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை மிக பொறுப்புடன் செய்வேன். நேர்மையுடன் பணியாற்றுவேன்.

பீஹார் துணை முதல்வர், விஜய் குமார் சின்ஹா
டில்லியின் வெற்றி நாட்டின் வெற்றி. இது நாட்டின் உணர்வுகளின் வெளிப்பாடு. பிரதமர் மோடி ஒரு பெண்ணை முதல்வராக ஆக்கியுள்ளார், அவர் அனுபவம் வாய்ந்தவர். அவர் சொல்வதைச் செய்கிறார்.

டில்லி அமைச்சர், கபில் மிஸ்ரா
பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை நாங்கள் செயல்படுத்துவோம்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

மருத்துவ செய்திகள்

எருக்கின் மருத்துவக் குணம்

இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ...

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...