பயங்கரவாத எதிர்ப்பில் உறுதி – ஜெய்சங்கர்

”பயங்கரவாதத்தை துளியும் சகித்துக்கொள்ள மாட்டோம் என்ற நிலைப்பாட்டில் இந்தியா எப்போதும் உறுதியாக இருக்கும்,” என, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

ஐரோப்பிய நாடான ஸ்விட்சர்லாந்தின் ஜெனிவாவில் நடந்த, ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலின், 58வது கூட்டத் தொடரில், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று உரையாற்றினார்.

அவர் பேசியதாவது:

உலகின் பல்வேறு நாடுகளில் நிலவும் புவிசார் அரசியல் கொந்தளிப்புகளால் தொடர் மோதல்கள் நிகழ்கின்றன. அதனால் ஏற்படும் புதிய சவால்களை எதிர்கொள்ளும்போது நல்லுறவுகள் உடைந்து, நிலைமை நிச்சயமற்றதாகவும், நிலையற்றதாகவும் மாறி வருகிறது.

மனித உரிமைகளை மேம்படுத்துவதிலும், பாதுகாப்பதிலும் இந்தியா எப்போதும் தீவிரமான பங்களிப்பை வழங்கி வருகிறது.

எங்கள் அணுகுமுறை, நிதி பொறுப்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் நிலைத்தன்மை ஆகிய கொள்கைகளை எப்போதும் நிலைநிறுத்தி, எங்கள் நட்பு நாடுகளின் முன்னுரிமைகளுக்கு ஏற்ப திறனை வளர்ப்பதிலும், மனித வளங்களையும், உட்கட்டமைப்பையும் வலுப்படுத்துவதிலும் கவனம் செலுத்துகிறது.

அதே நேரம், பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் உறுதியுடனும், சமரசமின்றியும் இருக்கிறோம். பயங்கரவாதத்தை துளியும் சகித்துக் கொள்ள மாட்டோம் என்ற நிலைப்பாட்டில் எப்போதும் உறுதியாக உள்ளோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள ...

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு; பிரதமர் மோடி பெருமிதம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவதை அரசு உறுதி செய்கிறது'' ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் & ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் – மத்திய அரசின் முடிவை அமல்படுத்திய டில்லி பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற மத்திய ...

இந்திய ராணுவம் பதிலடி

இந்திய ராணுவம் பதிலடி காஷ்மீர் எல்லைக்கோட்டுப் பகுதியின் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் பாகிஸ்தான் ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறும்; மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தாண்டி, அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வ ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வேண்டும் ''பஹல்காமில் பயங்கரவாதிகள் எந்த பயமும் இல்லாமல் அப்பாவி மக்களை ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர்கள் சத்தீஸ்கர் - தெலுங்கானா - மஹாராஷ்டிரா எல்லையில், நக்சல்களுக்கு ...

மருத்துவ செய்திகள்

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...