உலக அளவில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரிப்பு – பிரதமர் மோடி பெருமிதம்

உலக அளவில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்தார்.

டில்லியில் நடந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: உலகம் முழுவதும் உள்ள மக்கள் இந்தியாவுக்கு வர விரும்புகிறார்கள். உலகிற்கு புதிய பொருளாதார பாதையை இந்தியா வழங்கி உள்ளது. செமி கண்டக்டர்கள் முதல் விமானந்தாங்கி கப்பல்கள் வரை இந்தியா உற்பத்தி செய்கிறது. பல சர்வதேச மாநாட்டிற்கு இந்தியா தலைமை தாங்குகிறது.

உலகை முன்னோக்கி அழைத்து செல்லும் ஏ.ஐ., உச்சி மாநாட்டில் இந்தியா இணை தலைமையாளராக இருந்தது. உலக நாடுகளின் ‘பேக் ஆபீஸ்’ ஆக இந்தியா பல தசாப்தங்களாக இருந்தது. தற்போது தற்போது உலக நாடுகளின் தொழிற்சாலையாக உள்ளது. இந்தியாவின் வெற்றியை விரிவாக அறிய உலகம் விரும்புகிறது. உலக அளவில் நம் நாட்டின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது.

பல காலாவதியான சட்டங்களை பா.ஜ., அரசு ரத்து செய்துள்ளது. ஆங்கிலேயர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டுள்ள சட்டங்களுக்கு பதிலாக புதிய சட்டங்கள் உருவாக்கப்பட்டு உள்ளது.

பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 3வது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது மக்களின் நம்பிக்கையை காட்டுகிறது. இந்தியாவின் புதிய சாதனைகளை உலகளாவிய செய்தி சேனல்கள் வெளிநாடுகளுக்கு எடுத்து செல்லும். இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்புண் குணமாக

நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ...

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...