”நம் நாடு, 433 லட்சம் கோடி ரூபாய் பொருளாதார நாடாக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
டில்லியில் நேற்று நடந்த பட்ஜெட்டுக்கு பிந்தைய வேலைவாய்ப்பு குறித்த இணையவழி கருத்தரங்கில், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக, பிரதமர் மோடி பேசியதாவது:
கடந்த 2014 முதல், 3 கோடி இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 1,000 ஐ.டி.ஐ.,க்களை மேம்படுத்தவும், ஐந்து சிறப்பு மையங்களை அமைக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.
நம் நாடு, 329 லட்சம் கோடி ரூபாய் பொருளாதாரமாக மாறி உள்ளது. இது, 433 லட்சம் கோடி ரூபாயாக மாறும் நாள் வெகுதொலைவில் இல்லை.
திறன் மேம்பாடு, திறமை வளர்ப்பு ஆகியவை தேசிய வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம். இந்த துறைகளில் அதிக முதலீடு அவசியம்.
‘மக்களின் முதலீடு’ என்ற தொலைநோக்குப் பார்வை, கல்வி, சுகாதாரம், திறன் மேம்பாடு ஆகிய மூன்று துாண்களில் நிற்கிறது.
இந்த துறைகளில் முதலீடு செய்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அனைத்து பங்குதாரர்களும் உதவ வேண்டும். சுற்றுலாவை மையமாக வைத்து, நாடு முழுதும் 50 சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்படும். இந்த இடங்களில் உள்ள ஹோட்டல்களுக்கு உட்கட்டமைப்பு அந்தஸ்து வழங்குவது, சுற்றுலாவை எளிதாக்கி உள்ளூர் வேலைவாய்ப்பையும் அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ... |
காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ... |
நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ... |