குளிர்காலத்தில் உத்தரகண்ட் மாநிலத்திற்கு வந்தால் உண்மையான சூழலை அனுபவிக்க முடியும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
உத்தரகண்ட் மாநிலம் ஹர்சிலில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியதாவது:
சில நாட்களுக்கு முன்பு மானா கிராமத்தில் நடந்த பனிச்சரிவு சம்பவத்திற்கு முதலில் எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
குளிர்காலத்தில் உத்தரகண்ட் மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்ளுங்கள். உத்தரகண்ட் மாநிலத்தை மிகவும் சிறந்த சுற்றுலா இடமாக மாற்ற நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். எல்லைப் பகுதிகள் சுற்றுலாவின் பலன்களைப் மக்கள் பெற விரும்புகிறோம். உத்தரகண்ட் அரசின் தொலைநோக்குப் பார்வை மாநிலத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும்.
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும். குளிர்காலத்தில் உத்தரகண்ட் மாநிலத்திற்கு வந்தால் உண்மையான சூழலை அனுபவிக்க முடியும். உத்தரகண்ட் மாநிலத்தில் குளிர்காலம் இல்லாத நேரத்தில் கூட சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காண நடவடிக்கை எடுத்து வருகிறோம். சுற்றுலாத்துறை பன்முகப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
வழிபாடு
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கங்கை அம்மன் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார். அவர் கோவிலில் கூடியிருந்த மக்களை பார்த்து கை அசைத்தார். முன்னதாக, விமான நிலையத்தில் பிரதமர் மோடியை உத்தரகண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ... |
மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ... |