வனவிலங்கு பாதுகாப்பதில் முன்னணி – பிரதமர் மோடி பெருமிதம்

வன விலங்குகளைப் பாதுகாப்பதில் முன்னணியில் இருக்கிறோம் என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

மத்திய பிரதேசத்தில் 9வது புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு உள்ளது. இது குறித்து புகைப்படங்களை பகிர்ந்து மத்திய சுற்றுச்சூழல் மற்றும் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் கூறியிருப்பதாவது:

பிரதமர் மோடியின் சுற்றுச்சூழலை மீட்டெடுக்கும் முயற்சியால், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வனவிலங்கு பாதுகாப்பில் இந்தியா தொடர்ந்து பெரும் முன்னேற்றங்களை கண்டு வருகிறது. மத்தியப் பிரதேசத்தில் 9வது புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டு உள்ளது. இது குறித்து அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

அனைத்து வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் பாதுகாவலர்களுக்கு நான் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இந்த வளர்ச்சிக்கு பாடுபடும் நமது வன அதிகாரிகளின் இடைவிடாத முயற்சிகளுக்கும் பாராட்டுகள். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இதற்கு பதில் அளித்து பிரதமர் மோடி கூறியதாவது: வனவிலங்கு பிரியர்களுக்கு நல்ல செய்தி. இந்தியா வனவிலங்கை கொண்டாடும் கலாசாரத்தில் சிறந்து விளங்குகிறது. வன விலங்குகளைப் பாதுகாப்பதில் எப்போதும் முன்னணியில் இருப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள ...

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு; பிரதமர் மோடி பெருமிதம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவதை அரசு உறுதி செய்கிறது'' ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் & ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் – மத்திய அரசின் முடிவை அமல்படுத்திய டில்லி பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற மத்திய ...

இந்திய ராணுவம் பதிலடி

இந்திய ராணுவம் பதிலடி காஷ்மீர் எல்லைக்கோட்டுப் பகுதியின் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் பாகிஸ்தான் ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறும்; மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தாண்டி, அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வ ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வேண்டும் ''பஹல்காமில் பயங்கரவாதிகள் எந்த பயமும் இல்லாமல் அப்பாவி மக்களை ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர்கள் சத்தீஸ்கர் - தெலுங்கானா - மஹாராஷ்டிரா எல்லையில், நக்சல்களுக்கு ...

மருத்துவ செய்திகள்

தலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்

முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ...

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்

இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ...

இதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்

இவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் உணவு உட்கொள்ள ...