அமெரிக்க அதிபர்கள் யாருமே செய்யாத செயல் – பிரதமர் மோடி

தேர்தல் பிரசாரத்தின் போது துப்பாக்கியால் சுடப்பட்ட டிரம்ப், தற்போது நாட்டிற்காக சமரசமில்லாத அர்ப்பணிப்பை கொடுத்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியை பேட்டி எடுத்த அமெரிக்க கம்ப்யூட்டர் விஞ்ஞானியும், எழுத்தாளருமான லெக்ஸ் பிரிட்மேன், அந்த வீடியோவை சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த இன்டர்வ்யூவில், டிரம்ப்பை நண்பராகவும், ஒரு தலைவராகவும் எப்படி பார்க்கிறீர்கள்? என்று பிரிட்மேன் பிரதமரிடம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய பிரதமர் மோடி, 2019ல் அமெரிக்காவில் நடந்த ஹவுடி மோடி நிகழ்ச்சியை சுட்டிக்காட்டி சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது: கடந்த 2019ல் ஹூஸ்டனில் ‘ஹவுடி மோடி’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மக்கள் கூட்டம் அலைமோதியது. நான் உரையாற்றி கொண்டிருக்கும் போது, அதிபர் டிரம்ப் பார்வையாளர்களுடன் அமர்ந்திருந்தார். இது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

எனது உரையை முடித்த பிறகு, மேடையில் இருந்து கீழே இறங்கி வந்தேன். அப்போது, என்னுடன் சேர்ந்து அரங்கை வலம் வருமாறு டிரம்ப்பிடம் கோரிக்கை விடுத்தேன். அமெரிக்கர்களின் வாழ்க்கையை பொறுத்தவரையில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருக்கும் இடத்தில் அதிபர் ஒருவர் பாதுகாப்பின்றி நடந்து வருவது என்பது சாதாரண விஷயம் கிடையாது.

இது அவரது சொந்த முடிவாகும். என் மீதும், அந்த நிகழ்ச்சியில் என்னுடைய தலைமையின் மீதும் வைத்த நம்பிக்கையின் பேரில், மக்கள் கூட்டத்திற்கு மத்தியில், எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் என்னுடன் நடைபோட்டார். எங்களுக்கு இடையிலான வலுவான உறவு மற்றும் பரஸ்பரமான நம்பிக்கைக்கு இது சான்றாகும்.

கடந்த ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது, அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட போதும், டிரம்ப்பிடம் அதே உறுதியைக் கண்டேன். தற்போது நாட்டிற்காக சமரசமில்லாத அர்ப்பணிப்பை கொடுத்து வருகிறார், இவ்வாறு அவர் கூறினார்.

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் குறித்த கேள்விக்கு பதிலளித்த பிரதமர் மோடி, ‘இரு நாடுகளுடனும் நெருக்கமான உறவு இந்தியாவுக்கு உள்ளது. புடினுடன் அமர்ந்து பேசும் போது, போருக்கான நேரம் இதுவல்ல என்று கூறினேன். அதேபோல, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடமும் நட்பு ரீதியில், சில விஷயங்களை கூறினேன். உலகில் எத்தனை பேர் உங்களுடன் நின்றாலும், போர்க்களத்தில் தீர்வு கிடைக்காது என்று சொன்னேன்.

உக்ரைன் தனது ஆதரவு நாடுகளுடன் பலமுறை பேச்சு நடத்தியது. ஆனால் தீர்வு கிடைக்கவில்லை. அதற்கு பதிலாக, சண்டையிடும் இருநாடுகள் நேரடியாக பேச்சு நடத்தினால், பிரச்னை சரியாகி விடும்’ என்றார்.

அதேபோல, இந்தியா – சீனா இடையிலான உறவை வலுப்படுத்துவது குறித்த கேள்விக்கு பிரதமர் பதிலளித்ததாவது: போட்டி என்பது மோதல்களாக மாறக்கூடாது. வேறுபாடுகள் சச்சரவுகளாக மாற்றப்படக்கூடாது. மோதலை விட பேசி தீர்வு காண்பதையே எப்போதும் விரும்புகிறோம், என்று தனது நிலைப்பாட்டை கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மிரட்டும் எலி காய்ச்சல்

மிரட்டும் எலி காய்ச்சல் கேரளாவில் லெப்டோஸ்பிரோசிஸ் (எலி காய்ச்சல்) தீவிரமாக பரவிவருகிறது. இந்த ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா ந ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மருத்துவ செய்திகள்

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...

முட்டைக்கோசுவின் மருத்துவக் குணம்

முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ...