விண்வெளியில் வெறும் எட்டுநாள் தங்க சென்ற சுனிதா வில்லியம்ஸ் எதிர்பாரா விதமாக அமெரிக்காவின் போயிங்க் நிறுவண விண்வெளி ஓடங்கள், எலன் மஸ்க்கின் ஓடங்கள் சொதப்பியதால் 195 நாள் தங்க நேர்ந்தது
இந்த நீண்ட நாள் தனிமை அதுவும் சர்வதேச விண்வெளி ஓடத்தில் அந்தரத்தில் தனிமை, தொடர்ந்து விண்வெளி கப்பல்கள் சொதப்பி ஏற்பட்ட மன அழுத்தத்துடன் கூடிய தனிமை என்பது பெரும் கொடுமை, அதனை எல்லோரும் தாங்கமுடியாது
இது உடல்நலம் மனநலம் என எல்லாவற்றையும் பாதித்துவிடும், அமெரிக்க விஞ்ஞானிகள் அதிகம் கவலைபட்ட விஷயம் அவரின் உடல்நலம் அதையும் தாண்டி மனநலம்
மனநலம் சரியாக இருந்தால் உடல்நலம் சரியாகும், மனநல பாதிப்பு என்பது உடலை எளிதில் குலைத்துவிடும்
ஆனால் சுனிதா இதை அனாசயமாக கடந்திருக்கின்றார், எதிர்பாராத விதமாக அவர் சிக்கி கொண்ட இந்த கொடும் சூழலில், கடும் அழுத்தத்தில் அவரை காப்பாற்றியது அவர் எடுத்து சென்ற பகவத் கீதை என்கின்றன தகவல்கள்
சுனிதா அம்மையார் குஜராத்திகள் வழிவந்த இந்து , சோம்நாதபுரி ஆலயத்தை வழிபட்ட இந்துக்களின் வழி வந்த இந்து, அவர் ஒரு கிறிஸ்தவரை திருமணம் செய்தபோதும் அவர் இந்துவாக நின்றார், கீதை அவருக்கு பிடித்தமான ஒன்று
எந்த அளவுக்கு கீதையினை நேசித்தார் என்றால் விண்வெளிக்கு செல்லும் போதும் கீதையினை கொண்டு செல்லும்படி இருந்தது. ஆம் கீதையோடுதான் அவர் விண்வெளிக்கு செல்வார் , இம்முறையும் கீதையோடுதான் சென்றார்
அந்த கீதைதான் அவருக்கு ஆத்மபலம் கொடுத்தது, அந்த கீதையின் போதனைதான் அவரை இந்த கொடுமையிலும் காத்து மீட்டு வருகின்றது
பொதுவாக சுனிதா வில்லியம்ஸ் தன் தனிபட்ட வாழ்க்கையினை பெரிதும் வெளியில் சொன்னவர் அல்ல, ஆனால் மருத்துவராக ஆசைபட்டு தோல்வி அடைந்து கடற்படை வீராங்கானையாக வாழ்வினை தொடங்கி எத்தனையோ பெரும் தோல்விகள் சறுக்கல்களில் தன்னை தாங்கியது கீதை என சுருக்கமாகசொல்லியிருந்தார்
அதே கீதையுடன் விண்வெளிக்கு சென்று , பெரும் அழுத்தத்தை தாங்கிவிட்டு மிக மிக இயல்பாக மகிழ்வாக திரும்புகின்றார், கீதை அப்படியான ஞான நூல் எந்த சூழலையும் ஒரு மானுடன் தாங்கிநிற்கவும், எல்லாமே கர்மா, எல்லாமே விதிக்கபட்டது எதற்கும் கலங்காதே என்பதையும் சொல்லி, எல்லாவற்றையும் நடத்துபவன் இறைவன் என்பதையும் சொல்லி பந்த்பாச வலைகளை விடுவித்து, மரணபயம் எனும் பெரும் பயத்தையும் விடுவித்து வழிநடத்தும் சக்திமிக்க போதனை அது
கீதையின் பெருமை முன்பு ஐன்ஸ்டீன் முதல் ஏகபட்ட விஞ்ஞானிகளால் உலகுக்கு தெரிந்தது போல் இப்போது சுனிதாவினாலும் தெரிகின்றது
விண்வெளியில் அந்த பிரமாண்டத்தை காணும் போது பகவானின் விஸ்வரூப தரிசனம், கீதை சொன்ன விஸ்வரூபதரிசனம் அன்றி வேறு எது அவர் கண்ணுக்கு தெரிந்திருக்கும், தன் பக்தைக்கு அதை நேரில் காட்டத்தான் பகவான் அவருக்கு அனுகிரஹம் செய்திருக்கின்றார் என்பதை ஊகிப்பது ஒன்றும் கடினமல்ல
பகவத்கீதை ஒரு பொக்கிஷம், அதை ஒவ்வொரு இந்துகுழந்தையும் கற்க வேண்டிய ஞான நூல், இங்கு மும்மொழி கொள்கையினை விட அவசியமானது இந்துகுழந்தைக்கு கீதை சொல்லி கொடுக்க வேண்டியது
அதை அறநிலையதுறை செய்யவேண்டும், ஆதீனங்கள் மடங்கள் செய்யவேண்டும் ஆனால் செய்யமாட்டார்கள், இதனால் இந்து பெற்றோரும் ஆசிரியர்களுமே இதனை செய்யவேண்டும், இதுதான் எதிர்காலத்தில் நல்ல இந்துதலைமுறை உருவாக மகா அவசியமான பணி, இந்துக்கள் உலகில் பெரிதாக சாதிக்க மிக அடிப்படையான பணி
அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ... |
புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ... |
இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ... |