பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி ஏப்ரல் 6 ல் திறந்து வைக்கிறார்

பாம்பன் புதிய ரயில் பாலம் வரும் ஏப்ரல் 6ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்படும் என தென்னக ரயில்வே பொது மேலாளர் ராமேஸ்வரத்தில் அளித்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

பாம்பனில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் பாலம் மற்றும் ராமேஸ்வரத்தில் நடைபெற்று வரும் ரயில் நிலைய கட்டுமான பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காகவும் பிரதமர் வருகையை ஒட்டி திறப்பு விழாவிற்கான ஏற்பாடு குறித்து ஒத்திகை நடத்துவதற்காக தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் வந்தார்.

சிறப்பு ஆய்வு ரயில் மூலம் ராமேஸ்வரம் வந்த அவர், ரயில் நிலையத்தை ஆய்வு செய்த பின் செய்தியாளரிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: வரும் ஏப்ரல் 6ம் தேதி ராம நமமி அன்று பிரதமர் நரேந்திர மோடி பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க இருக்கிறார்.

அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து இன்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பிரதமர், ராமேஸ்வரத்திலிருந்து தாம்பரம் செல்லும் சிறப்பு ரயிலை கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார். பாம்பன் கடலில் உள்ள பழைய ரயில் தூக்கு பாலம் மோசமான நிலையில் இருப்பதால் பாலத்தை அகற்றுவதில் சிரமம் இருக்கிறது.

அதனை அகற்றுவது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும். ராமேஸ்வரம் தனுஷ்கோடி இடையேயான ரயில் சேவை பணிகள் குறித்து நடைமுறை சிக்கல்கள் இருப்பதால் மாநில அரசுடன் பேசி விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாஜக கூட்டணி வெற்றிக்கான காரணம ...

பாஜக கூட்டணி வெற்றிக்கான  காரணம் பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் ...

பீகார் ஆட்சியைத் தக்கவைத்த தேச ...

பீகார் ஆட்சியைத் தக்கவைத்த தேசிய ஜனநாயகக் கூட்டணி பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமை யிலான தேசிய ...

நான் தொழில் செய்வதில் என்ன தவறு

நான் தொழில் செய்வதில் என்ன தவறு "நான் தொழில் செய்வதில் என்ன தவறு இருக்கிறது? எனக்கு ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி ச ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி சம்பாதித்தது மத்திய அரசு மத்திய அரசு கடந்த ஐந்துஆண்டுகளில் தனது அலுவலகங்களில் இருந்து ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வே ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்திய நிதின் கட்கரி ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் துணைநிறுவனமான விடா ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

மருத்துவ செய்திகள்

ஆஸ்துமாவை குணமாக்கும் மிளகு

ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ...

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்

இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ...