அதிமுக – பாஜக கூட்டணி தொடர்பான கேள்விக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னை விமான நிலைய பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது பதில் அளித்தார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று தனது கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் டெல்லி சென்றார். புதிதாக திறக்கப்பட்ட கட்சி அலுவலகத்தை பார்வையிட்டார்.
பின்னர் நேற்று இரவு தனது சகாக்களுடன் சென்று அமித் ஷாவை சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.
இன்று சென்னை திரும்பிய எடப்பாடி பழனிசாமி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று நீங்கள் அறிவித்தீர்கள் அதில் உறுதியாக இருக்கிறீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “இது அரசியல், தேர்தல் கூட்டணியில் மாற்றம் இருக்கும். எந்த கட்சியாவாது இதே கூட்டணியில் தான் இருப்போம் என்று உத்தரவாதம் இருக்கிறதா? திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் எல்லாம் அங்கேயே தான் இருப்பார்கள் என்று உறுதியாக சொல்லிவிடமுடியுமா?
கூட்டணி குறித்து ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் பேசி முடிவெடுப்போம்.
அதிமுக கூட்டணி என்பது தேர்தல் சமயத்தில் பத்திரிக்கையாளர்கள், ஊடகவியலாளர்களை சந்தித்து அறிவிப்போம். 2019 மக்களவைத் தேர்தலின் போது பிப்ரவரி மாதம் தான் அறிவித்தோம். அதேபோல் 2021 சட்டமன்றத் தேர்தலிலும் தேர்தல் சமயத்தில் தான் அறிவித்தோம்.
அதிமுகவை பொறுத்தவரை மக்கள் விரோத திமுக அரசை வீழ்த்த வேண்டும். அதற்கான அத்தனை முயற்சிகளையும் அதிமுக எடுக்கும்” என்று தெரிவித்தார்.
அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ... |
1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ... |
மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ... |