பாஜக – அதிமுக கூட்டணி உறுதி ஜேபி நட்டாவையும் சந்நதித்த பழனிசாமி

2026-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கே அதிமுக மீண்டும் திரும்புகிறது. இதனை உறுதி செய்யும் வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அக்கட்சியின் குழு நேற்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியது. மேலும் பாஜகவின் தேசியத் தலைவர் ஜேபி நட்டாவையும் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக தலைவர்கள் சந்தித்து பேசினர். இதனையடுத்து பாஜகவுடனான அதிமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி குறித்து அறிவிப்போம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறிவந்தார்

அதிமுகவின் அனைத்து பிரிவுகளும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்; அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்கிற குரல்கள் அக்கட்சியில் வலுத்து வந்தன. ஆனால் எடப்பாடி பழனிசாமியோ, பிரிந்து சென்றவர்களை மீண்டும் அதிமுகவில் சேர்க்கவே முடியாது என திட்டவட்டமாக கூறிவந்தார். அதேநேரத்தில் பாஜகவுடனான கூட்டணி குறித்து சில மாதங்களுக்கு முன்னர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார் எடப்பாடி பழனிசாமி. அண்மையில், திமுகதான் எதிரி; இதர கட்சிகள் அனைத்தும் எதிரி அல்ல; திமுகவுகு எதிரான வாக்குகள் சிதறக்கூடாது என்பதுதான் எங்கள் நோக்கம் என கூறி இருந்தார். இதனால் அதிமுக, மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைக்கக் கூடும் என தகவல்கள் பரவின.

இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கேபி முனுசாமி, தம்பிதுரை, சிவி சண்முகம் மற்றும் எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் நேற்று டெல்லி சென்றனர். டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினர். எடப்பாடி பழனிசாமியும் அமித்ஷாவும் தனியாகவும் ஆலோசனை நடத்தினர். இதனால் பாஜக தலைமையிலான கூட்டணியில் அதிமுக மீண்டும் இடம் பெறுவது உறுதியானது. இந்த சந்திப்பைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷா தமது சமூக வலைதளப் பக்கத்தில், 2026-ல் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என பதிவிட்டிருந்தார்.

அமித்ஷாவை மட்டுமல்லாமல், பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டாவையும் எடப்பாடி தலைமையிலான அதிமுக தலைவர்கள் குழு நேற்று டெல்லியில் சந்தித்தது. இதனால் தமிழக சட்டசபை தேர்தலுக்கான அதிமுக- பாஜக கூட்டணி உறுதியாகி உள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குற்றங்களை மூடி மறைக்கும் திமு ...

குற்றங்களை மூடி மறைக்கும் திமுக அரசு – அண்ணாமலை குற்றச்சாட்டு பொதுமக்களின் அடிப்படைத் தேவையான சுத்தமான குடிநீரைக் கூட வழங்க ...

திமுக ஆட்சிக்கு பூட்டு போட வேண் ...

திமுக ஆட்சிக்கு பூட்டு போட வேண்டும்  – பாஜக மாநில தலைவர் ''அ.தி.மு.க., -பா.ஜ., கூட்டணி உறுதியான கூட்டணி; இறுதியான கூட்டணி'' ...

”தமிழக அரசு எனது போனை ஒட்டு கே ...

”தமிழக அரசு எனது போனை ஒட்டு கேட்கிறது”- மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ''தமிழக அரசு எனது போனை ஒட்டு கேட்கிறது'' என்று ...

விண்வெளியில் செயற்கைகோள்களின் ...

விண்வெளியில் செயற்கைகோள்களின் இரண்டாவது இணைப்பு வெற்றி; மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் விண்வெளியில் செயற்கைக்கோள்களின் இரண்டாவது இணைப்பு வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது என ...

அக்சார்தம் கோவிலில் அமெரிக்க த ...

அக்சார்தம் கோவிலில் அமெரிக்க துணை அதிபர் வான்ஸ்- உஷா தம்பதி வழிபாடு அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ...

கலாசாரம் தொடர்பான பிரதமர் மோடி ...

கலாசாரம் தொடர்பான பிரதமர் மோடியின் உரைகள் வெளியீடு கலாசாரம், பாரம்பரியம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய ...

மருத்துவ செய்திகள்

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...