இரு நாட்டு உறவை கெடுக்கும் வகையில் செயல்படக்கூடாது – பிரதமர் மோடி வலியுறுத்தல்

” இந்தியா – வங்கதேச உறவில் தற்போது நிலவும் சூழலை கெடுக்கும் வகையில் செயல்படுவதை தவிர்க்க வேண்டும் என வங்கதேச அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுசிடம் பிரதமர் மோடி தெரிவித்தார்,” என மத்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி கூறினார்.

தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் மோடி பிம்ஸ்டக் மாநாட்டில் பங்கேற்றார். மாநாட்டின் இடையே அவர், வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுசை சந்தித்தார்.

இச்சந்திப்பு தொடர்பாக நிருபர்களிடம் வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியதாவது: ஜனநாயக முறைப்படி நிலையான அமைதியான மற்றும் வளர்ச்சியடைந்த வங்கதேசத்திற்கு இந்தியா எப்போதும் ஆதரவு அளிக்கும் என பிரதமர் உறுதி அளித்தார். இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மக்கள் சார்ந்ததாக இருக்க வேண்டும் எனக்கூறியதுடன், இரு நாடுகளுக்குமான நீண்ட கால ஒத்துழைப்பு மூலம் மக்களுக்கு அதிக நன்மை கிடைத்துள்ளது என்பதை பிரதமர் அடிக்கோடிட்டு காட்டினார். இதே நிலைப்பாட்டில் வங்கதேசத்துடன் நேர்மறையான மற்றும் ஆக்கப்பூர்வமான உறவை உருவாக்க இந்தியா விரும்புகிறது.

இரு நாடுகளுக்கு உறவில் தற்போது நிலவும் சூழலை கெடுக்கும் வகையில் செயல்படுவதை தவிர்க்க வேண்டும். எல்லையில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை நிலவ, சட்டவிரோதமாக ஊடுருவதை தடுக்க சட்ட அமலாக்கலை கடுமையாக்க வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார்.

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து இந்தியாவின் கவலையை முகமது யூனுஷிடம் பகிர்ந்து கொண்ட பிரதமர் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாக தெரிவித்தார். இவ்வாறு விக்ரம் மிஸ்ரி கூறினார்.

கடந்த சில நாட்களுக்கு முன், சீன அதிபர் ஜின் பிங்யை சந்தித்த முகமது யூனுஸ்,’ இந்தியாவின் ஏழு வடகிழக்கு மாநிலங்கள் நிலத்தால் சூழப்பட்டு உள்ளன. அவை வங்கக்கடலை அணுகுவதற்கு வழியே இல்லை. எனவே, இந்த பகுதிகள் வங்கக்கடலை அணுகுவதற்கான பாதுகாவலனாக வங்கதேசம் உள்ளது. அதனால், வங்கதேசத்தில், சீனா அதிக முதலீடுகளை செய்து, உற்பத்தி சந்தைப்படுத்துதலை அதிகரித்தால், நாட்டின் வளர்ச்சிக்கு சாதகமாக அமையும் ‘ எனக்கூறியிருந்தார். இதற்கு இந்தியாவில் எதிர்ப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிக ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு கல்பாக்கத்தில் உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கப்பட்ட முன்மாதிரி வேக ஈனுலை, ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத்த மாநிலங்கள் மக்களவை தொகுதிகளை இழக்காது” – பிரதமர் மோடி மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை ...

உலக சுகாதார தினம் : “பூவுலகை உரு ...

உலக சுகாதார தினம் : “பூவுலகை உருவாக்க உழைக்கும் அனைவருக்கும் நன்றி” – பிரதமர் மோடி உலக சுகாதார நிறுவனத்தால் (WHO) தொடங்கப்பட்ட உலக சுகாதார ...

இந்தியாவுக்கு முதலிடம் என்பதே ...

இந்தியாவுக்கு முதலிடம் என்பதே எங்களது தாரக மந்திரம்: பாஜக 47-வது நிறுவன தினத்தில் பிரதமர் மோடி பெருமிதம் ​பாஜக​வின் 47-வது நிறுவன நாளை முன்​னிட்​டு, நாடு முழு​வதும் ...

மருத்துவ செய்திகள்

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு

சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ...