பிரதமருக்கு நன்றி கூறாத முதல்வர் ஸ்டாலினை மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள் – தமிழிசை ஆவேசம்

: ”பாம்பன் பாலத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, தமிழக மக்களுக்கு ரூ. 8 ஆயிரம் கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கியுள்ளார். அதற்கு நன்றி தெரிவிக்காத முதல்வர் ஸ்டாலினை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” என்று பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் தமிழிசை தெரிவித்தார்.

மதுரை விமான நிலையத்தில் அவர் கூறியதாவது:

பிரதமர் மோடி, நல்லிணக்க துாதரைப் போல் இலங்கைக்கு சென்று தமிழ் மக்களையும் சந்தித்துஉள்ளார்.

அந்நாட்டு பிரதமர், ‘இந்த மண், இந்தியாவுக்கு எதிராக எந்த காலத்திலும் பயன்படுத்தப்படாது’ என உறுதி மொழிந்துஉள்ளார். மீனவர்களின் நலம் காப்போம் என தெரிவித்து, அவர்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது என உறுதிமொழியையும் பெற்று இலங்கையில் நல்லுறவை பேணிய பிரதமர் தமிழகம் வந்துள்ளார்.

10 hour(s) ago

தமிழ் மக்களுக்கு ரூ. 8 ஆயிரம் கோடி திட்டங்களை அறிமுகம் செய்து, ஏழு மடங்கு ரயில்வே திட்டங்களை கொடுத்து தமிழகத்திற்கு நல்ல திட்டங்களை நிறைவேற்றும் இந்த நிகழ்வில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றிருக்க வேண்டும்.

ஒரு மாநிலத்திற்கு பிரதமர் வரும்போது அம் மாநில முதல்வர் பிரதமரை வரவேற்க வேண்டும் என்பது விதி. ஆனால் பிரதமரை புறக்கணிக்க வேண்டும் என்றே முதல்வர் ஸ்டாலின் ஊட்டி சென்றுள்ளார்.

எந்த மாநிலத்திலும் இல்லாத உயர் தொழில்நுட்பத்தில் உருவான பாம்பன் பாலத்தை பிரதமர் மோடி திறந்துஉள்ளார். அதனை வரவேற்று நன்றி சொல்லாமல் புறக்கணித்த முதல்வரை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘தேர்தல் யாத்திரை’: பீகாரில் ரூ ...

‘தேர்தல் யாத்திரை’: பீகாரில் ரூ.7,200 கோடி திட்டங்கள். பிரதமர் நரேந்திர மோடி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள ...

சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாள ...

சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாளியை கைது செய்யாதது ஏன்? நயினார் நாகேந்திரன் கேள்வி ஒரு 10 பவுன் நகைக்காக தனிப்படை அமைத்து எவ்வித ...

‘தலித்’ பெயரை வைத்து அரசியல ...

‘தலித்’ பெயரை வைத்து அரசியல் செய்யும் காங்கிரஸ்;பிரதமர் மோடி குற்றச்சாட்டு பீஹாரில் ரூ.7,200 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி ...

லடாக்கில் ஆகாஷ் வான் பாதுகாப்ப ...

லடாக்கில் ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு சோதனை வெற்றி; இந்திய ராணுவம் பெருமிதம் லடாக்கில் சுமார் 15,000 அடி உயரத்தில் ஆகாஷ் வான் ...

ரூ.24,000 கோடியில் விவசாயிகளுக்கு உ ...

ரூ.24,000 கோடியில் விவசாயிகளுக்கு உதவும் புதிய திட்டம்: ஒப்புதல் அளித்தது மத்திய அரசு விவசாயிகளுக்கு உதவும் ரூ.24 ஆயிரம் கோடி தன் தானிய ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்பட ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்படுத்தும் நோக்கில் தேசிய இளையோர் சமையல் போட்டி தொடக்கம் மத்திய சுற்றுலா அமைச்சகத்துடன் இணைந்து பிஎச்டி வர்த்தக மற்றும் ...

மருத்துவ செய்திகள்

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...