‘வங்கதேசத்தில் அமைதி திரும்ப வேண்டும். தேர்தல் நடத்த வேண்டும்’ என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார்.
டில்லியில் தனியார் நிறுவனத்தின் சார்பில் நடந்த ரைசிங் பாரத் மாநாட்டில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நீண்ட நாட்கள் வெளியுறவு அமைச்சர் பொறுப்பு வகிப்பவர் என்ற பெருமையை பெற்றுள்ள ஜெய்சங்கர், வங்கதேச கலவரம், இந்தியா – சீனா உறவு உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது: வங்கதேசத்தில் தற்போதுள்ள நிலை கவலை அளிக்கிறது. அங்கு சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்படுவது குறித்து இந்தியாவின் கவலையை வெளிப்படையாக தெரிவிக்கிறோம். ஏனென்றால், வங்க தேசத்தின் நலனில் வேறெந்த நாடுகளையும் விட நாம் அதிக அக்கறை கொண்டுள்ளோம். அது நம் டிஎன்ஏவில் உள்ளது.
வங்கதேசத்தில் அமைதி திரும்பவும், நிலையான ஆட்சி அமையவும் அந்நாட்டு ஆட்சியாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜனநாயக ஆட்சி மலர முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும். இந்தியா- சீனா உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளும் புரிந்து கொண்டன. இவ்வாறு அவர் பேசினார்.
இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ... |
மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ... |
தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ... |