போதைப்பொருட்களுக்கு எதிரான எங்கள் நடவடிக்கைகள் தொடரும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து,மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள அறிக்கை:
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முழு பலத்துடன் போதைப்பொருள் கும்பல்களை ஒழித்து வருகிறது.
போதைப்பொருள் இல்லாத பாரதத்தை உருவாக்குவதற்கான அரசின் நடவடிக்கைகளில் அசாமில் ரூ.24.32 கோடி மதிப்புள்ள 30.4 கிலோ மெத்தமெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருட்களுக்கு எதிரான எங்கள் நடவடிக்கைகள் தொடரும். இந்த பெரிய நவடிக்கை எடுத்து என்.சி.பி, அசாம் காவல்துறை மற்றும் சி.ஆர்.பி.எப் க்கு வாழ்த்துகள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ... |
காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ... |
மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ... |