பாகிஸ்தானுக்கு பதிலடி ; முப்படைகளுக்கு முழு சுதந்திரம் – பிரதமர் மோடி உறுதி

ல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தருவதற்கான உயர்மட்ட ஆலோசனை கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் டில்லியில் இன்று நடந்தது. இக்கூட்டத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான், முப்படை தளபதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய மோடி, எதிரிகள் மீது எந்த இடத்தில், எந்த நேரத்தில் எந்த இ லக்குகள் மீது தாக்குதல் நடத்துவதில் முப்படைகள், தாங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்றார்.

கடந்த ஏப்.22 ல் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் சுற்றுலாவுக்கு சென்ற பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து மத்திய அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. நேற்று பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்து ஆலோசனை நடத்தி இருந்தார்.

இன்று டில்லியில் உள்துறை அமைச்சகத்தில் பாதுகாப்பு தொடர்பான முக்கிய கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன்,எல்லைப் பாதுகாப்புப் படை, அசாம் ரைபிள்ஸ் மற்றும் தேசிய பாதுகாப்புப் படையின் இயக்குநர் ஜெனரல்கள்,மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையின் மூத்த அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து டில்லியில் பிரதமர் மோடி, தனது இல்லத்தில் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான், ராணுவ தளபதி உபேந்திர திவேதி, கடற்படை தளபதி தினேஷ் திரிபாதி, விமானப்படை தளபதி அமர் பிரீத் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், பஹல்காம் தாக்குதல், அதற்கு பிறகு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், பதிலடி தருவது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

ராணுவ தளபதிகள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி பயங்கரவாதத்திற்கு மரண அடி கொடுக்க வேண்டியது அவசியம். நமது முப்படைகளின் திறன் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. அவர்களுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டு உள்ளது. எதிரிகள் மீது எந்த நேரத்தில் எந்தவகையில் எந்தஇலக்குகள் மீது தாக்குதல் நடத்தலாம் என்பதை படைகள் தாங்களே முடிவு செய்யலாம், என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...

கறிவேப்பிலையின் மருத்துவக் குணம்

கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ...